Crime : திருச்சி மாவட்டத்தில் பெண்ணின் முன்பு நிர்வாணமாக நின்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.


நிர்வாணமாக நின்ற இளைஞர்


திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்த காட்டுப்புத்தூர் அருகே உள்ள சின்ன பள்ளிபாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுவிசன் (33). இவர் ஜேசிபி ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் பக்கத்து வீட்டில் வசித்து வரும் 38 வயது இளம்பெண் ஒருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் அந்த பெண் தனது வீட்டில் சமையலறையில் நின்று கொண்டு வேலை செய்து கொண்டிருந்தார்.


அப்போது சுவிசன் என்ற நபர் அந்த பெண் பார்க்கும்படியாக தான் அணிந்திருந்த ஆடைகளை அவிழ்த்துவிட்டு நிர்வாணமாக நின்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் பக்கத்து வீட்டு இளைஞர் அறுவறுக்கத்தக்க வகையில் நடந்து கொண்டது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார்  அளித்தார். அதன்பேரில் போலீஸ்சார் வழக்குப்பதிவு செய்து சுவிசனை கைது செய்தனர். பின்னர் அவர் உடனே ஜாமீனில் வெளியே வந்தார்.


முன்விரோதம்


இதுதொடர்பாக போலீசார் தரப்பில் கூறியதாவது, "அந்த பெண்ணுக்கும், சுவிசனுக்கும் இடையே முன்விரோதம் இருக்கிறது. அந்த பெண் அளித்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்து சுவிசனை கைது செய்துள்ளோம். மேலும் அவர்களின் இடையிலான பிரச்சனைகள் குறித்து புலன் விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


முன்னதாக, இதேபோன்ற சில நாட்களுக்கு முன்பு சேலத்தில் நிகழ்ந்துள்ளது.  சேலம் மாவட்டம் ஏற்காடு அடிவாரத்தில் வசித்து வருபவர் ரமேஷ் பாபு. இவரின் வீட்டின் எதிரில் வசிக்கும் மாரிமுத்து என்பவரின் மகன் நடராஜன் (35). இவர் அடிக்கடி அரைநிர்வாணமாக நின்று கொண்டிருப்பதை வழக்கமாக வைத்திருந்தார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் சொல்லியும் கேட்கவில்லை.


அப்போது ஒரு நாள் போதையில் ரமேஷ் பாபுவின் வீட்டிற்கு எதிரில் வந்து நிர்வாணமாக நின்றுள்ளார். இதனால் அவரை கண்டித்த ரமேஷ் பாபுவை நடராஜன் கடுமையாக தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரமேஷ் பாபுவின் மனைவி அருகில் இருக்கும்  காவல்நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, போலீசார் அவரை கைது செய்துள்ளனர். 




மேலும் படிக்க: Crime : முகமுடி அணிந்து தனியொருவரை தாக்கிய 10-12 பேர்...கையை வெட்டி எடுத்துச்சென்ற கொடூரம்


மேலும் படிக்க: ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்.. மீண்டும் எச்சரித்து கட்டுப்பாட்டை வலியுறுத்தும் WHO


மேலும் படிக்க: Auto Taxi Free : ஆட்டோ.. டாக்ஸி கட்டணம் உயர்வை அறிவித்த அரசு.. அரசு அதிரடி..