ஹரியானாவின் குருக்ஷேத்திரத்தில் நேற்று அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் முன்பின் தெரியாத ஒருவரைத் தாக்கி அவரது கையை வெட்டியுள்ளனர். பின்னர், அந்த வெட்டப்பட்ட கையை தங்களுடன் எடுத்துச் சென்றதாக போலீசார் கூறியுள்ளனர். ஜுக்னு என்று அழைக்கப்படும் அந்த நபர், லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவரது உடல்நிலை கவலைக்கிடமானதாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


இந்த சம்பவம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இது சதார் காவல் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள குருக்ஷேத்ரா ஹவேலியில் நடந்தது. அதிகாரிகளின் கூற்றுப்படி, குற்றவாளியை கண்டுபிடிக்க சிசிடிவி ஆதாரங்களை போலீசார் தற்போது ஆராய்ந்து வருகின்றனர்.




அடையாளம் தெரியாத பத்து முதல் பன்னிரெண்டு பேர் முகத்தை மூடிக்கொண்டு குருக்ஷேத்ரா ஹவேலிக்குள் நுழைந்துள்ளனர்.பின்னர் பாதிக்கப்பட்ட ஜக்னுவைத் தாக்கி, கையை வெட்டியுள்ளார்கள். இச்சம்பவத்துக்கான சரியான காரணம் தெரியவில்லை" என்று ஹவெலி டிஎஸ்பி ராம்தத் நைன் கூறியுள்ளார். "பாதிக்கப்பட்ட நபரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்படும். சிசிடிவி காட்சிகளும் ஸ்கேன் செய்யப்படும்,'' என்றார்.


நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர் குருக்ஷேத்ரா ஹவேலிக்கு வெளியே அமர்ந்திருந்தபோது 10-12 நபர்களால் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளார்.