டெல்லியில் ஆட்டோ கட்டணம் உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 


டெல்லியில் ஆட்டோ, டாக்ஸி கட்டணம் உயர்த்தப்படுவது குறித்தி மாநில அரசின் போக்குவரத்து துறை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.


பொது போக்குவரத்தை தவிர, மக்கள் தங்கள் அவசர கால பயணங்களுக்கு ஆட்டோ, டாக்ஸி உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வருகின்றனர். பெட்ரோல், டீசல் உயர்வு உள்ளிட்ட பல காரணங்களுக்காக கட்டணம் உயர்க்கப்பட்டுள்ளது. 


புதிய கட்டணத்தின் படி, ஆட்டோக்களுக்காப குறைந்தபட்ச கட்டணம் ரூ.25 -லிருந்து 30 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மீட்டருக்கு ஒரு கிலோமீட்டர் கட்டணம் ரூ.9.5-லிருந்து 11 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 






ஏ.சி.வசதி இல்லாத டாக்ஸிகளுக்கு குறைந்தபட்ச கட்டணமான ரூ.40-ல் இருந்து அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டர் ரூ.17 கூடுதலாக செலுத்த வேண்டும். 


இரவு நேரங்களில் 11 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை ஆட்டோவில் பயணிக்க இனி கூடுதலாக 25 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும். போக்குவரத்து நெரிசலின் உள்ளிட்ட நேரங்களில் வெயிட்டங் சார்ஜ் ஆக ஒவ்வொரு நிமிடத்திற்கும் 75 ரூபாய் கொடுக்க வேண்டும். ஷாப்பிங் பைகள் மற்றும் சிறிய அளவிலான பெட்டிகள் ஆகியவைகள் தவிர மற்ற லக்கேஜ்களுக்கு கூடுதலாக ரூ.10 செலுத்த வேண்டும். 


மேலும், இரவு நேரத்தில் டாக்ஸி சேவைகளுக்கான கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை. டாக்ஸிகளில் பயணிக்கும்போது, லக்கேஜ்களுக்கான கட்டணம் ஒரு பைக்கு ரூ.15 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெயிட்ங் கட்டணம் நிமிடத்திற்கு ரூ.1 ஆக உள்ளது. முன்னதாக, கிலோமீட்டருக்கு ரூ.14 ஆகவும் இருந்தது. 


ஏ.சி. டாக்ஸிகளுக்கான கட்டணம் கிலோ மீட்டருக்கு ரூ.16-இல் இருந்து ரூ.20 ஆக உயர்ந்துள்ளது. 


கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கலாட், பெட்ரோல், சி.என்.ஜி. உள்ளட்டவைகளின் விலை உயர்வு ஆட்டோ, டாக்ஸி வைத்திருப்பவர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர்களுக்கு உதவி செய்வதற்காகவே டாக்ஸி, ஆட்டோ கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.  


டெல்லியில் சுமார் 93 ஆயிரம் ஆட்டோக்கள் மற்றும் 80 ஆயிரம் டாக்ஸிகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.