Crime: தஞ்சாவூரில் சார்ஜ் போட்டப்படியே பேசியபோது, செல்போன் வெடித்து பெண் ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


செல்போன் சார்ஜர்:


இன்றைய காலகட்டத்தில் செல்போன் இல்லாத வீடுகளே இல்லை. பள்ளி செல்லும் குழந்தைகளை தவிற அனைவரும் தனித்தனியே செல்போனை  பயன்படுத்தி வருகின்றனர். ஆனாலும், இன்றைய சூழ்நிலையில்,  பள்ளி மாணவர்களும் செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் வீடுகளில் பிளக் பாயிண்டுகளில் எப்போது சார்ஜர் அப்படியே இருக்கும்.  இப்படி எப்போதும் பயன்படுத்தும் சார்ஜரை நாம் சரியாக கையாளுகிறோமா என்றால் அது கேள்விகுறிதான். வேலைக்கு செல்லும் அவசரத்தில் பிளக் பாயிண்டுகளில் இருக்கும் சார்ஜரை தனியாக எடுத்து வைப்பதோ, அல்லது ஸ்வீட்சை கூட ஆப் செய்யாமல் தான் இருக்கிறோம்.


மேலும், சார்ஜர் போட்டுக் கொண்டே செல்போனை சிலர் பயன்படுத்துவம் உண்டு. இத்தகைய அலட்சியப்போக்கு இருந்தால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். இந்நிலையில், தஞ்சாவூரில் சார்ஜ் போட்டப்படியே பேசியபோது, செல்போன் வெடித்து பெண் ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பறிபோன இளம்பெண் உயிர்:


தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியைச் சேர்ந்தவர் கோகிலா. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவரது கணவர் உயிரிழந்தார். தனது மகனுடன் வசித்து வந்த  கோகிலா, கபிஸ்தலம் என்ற ஊர் அருகே செல்போன் கடை மற்றும் வாட்ச் சர்வீஸ் செய்யும் கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல,  நேற்று காலை இவர் கடைக்கு சென்றிருக்கிறார். அங்கு கோகிலா கடை வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். அப்போது, மதியம் செல்போனுக்கு சார்ஜ் போட்டுவிட்டு தனது வேலைகளை செய்துக் கொண்டிருந்தார். 


அந்த நேரத்தில் இவரது செல்போனுக்கு அழைப்பு வந்தது. அப்போது, சார்ஜ் போட்டப்படியே செல்போனை எடுத்து பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. போனில் பேசிக் கொண்டி இருந்தபோது, திடீரென செல்போன் வெடித்து சிதறியது. இதில், கடை முழுவதும் தீ பற்றியது. உடனே இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்தனர். பின்னர், தீக்காயங்களுடன் கிடந்த கோகிலாவை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.


கோகிலா உயிரிழந்த சம்பவம்  குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  சார்ஜ் போட்டபோது வெடித்ததால் உயிரிழந்தாரா? மின் கசிவு காரணமா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த கோகிலாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்ட செல்லப்பட்டது. செல்போனில் சார்ஜ் போட்டப்படி பேசியதால் போன் வெடித்து பெண் ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் படிக்க


Crime: 'கடனை திருப்பி தரவில்லை; தரக்குறைவாக நடத்திய போலீசார்’ - காவல் நிலையத்தில் தீக்குளித்த பெண் - நடந்தது என்ன?