Crime: ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவர் 6 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ராஜஸ்தான் மாநிலம் பாலி பகுதியைச் சேர்ந்தவர் மிஸ்ராலால் மேக்வால். இவரது மகன் ஜோகேந்திரா (33). இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். இந்நிலையில், கடந்த 11ஆம் தேதி வழக்கம்போல் வேலைக்கு சென்ற ஜோகேந்திரா இரவு நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அவர்களது உறவினர்கள் கடந்த 13ஆம் தேதி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். 


புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஜோகேந்திராவை தேடி வந்தனர். இதற்கிடையில், சந்தேகத்தின் பேரில் மதன்லால் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.  அதன்படி, ஜோகேந்திராவின் மனைவிக்கும், மதன்லால் என்பவருக்கும் இடையே பழக்கும் ஏற்பட்டு வந்தது. 


ஜோகேந்திரா வேலைக்கு சென்றபிறகு, அவரது மனைவி  மதன்லாலுவுடன் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளார். இந்த விஷயம் நாளடைவில் ஜோகேந்திராவுக்கு தெரிய வந்ததும் அவர் மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் இதனை கேட்காமல் மீண்டும் மதன்லாலுவுடன் பழக்கத்தில் இருந்துள்ளார். இதனால் ஜோகேந்திராவுக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. அப்போது கணவர் ஜோகேந்திராவை கொலை செய்ய மதன்லாலிடன் கூறியுள்ளார்.


தொடர்ந்து தன்னுடைய காதலுக்கு இடையூறாக இருந்து வரும் ஜோகேந்திராவை கொலை செய்ய மதன்லால் திட்டம் போட்டார். அதன்படி, சம்பவத்தன்று வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார் ஜோகேந்திரா. அப்போது, அவரை தரதரவென இழுத்து ஒரு காட்டு பகுதிக்கு அழைத்து சென்று கொலை செய்துள்ளார். பின்னர், அந்த உடலை தலை, கை, கால்கள் என 6 துண்டாக வெட்டியுள்ளார். அந்த உடல் பாகங்களை தனது வீட்டில் இருந்து இரவு நேரத்தில் எடுத்துச் சென்று சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள தோட்டம் மற்றும் காட்டுப்பகுதிக்குள் புதைத்துள்ளதாக அவர் வாக்குமூலம் அளித்தார். 


இதனை அடுத்து, மதன்லால் உதவியுடன் போலீசார் கொலை செய்யப்பட்ட இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டனர். மேலும், கொலையை மறைக்க, உடல் புதைக்கப்பட்ட இடத்தை கண்டுபிடிக்காமல் இருக்க மரக்கன்றுகளை அங்கு நட்டு வைத்துள்ளார். இதனை அடுத்து, போலீசார் மதன்லாலுவை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூர கொலை சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் படிக்க 


Chamoli Accident: உத்தராகாண்டில் பயங்கரம்.. டிரான்ஸ்ஃபார்மர் வெடித்து 10 பேர் பலி..பலர் படுகாயம்..


Crime: குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: கணவன் உள்ளிட்ட 2 பேர் கைது


உபி இளைஞரை மணந்து அழைத்து சென்ற வங்கதேசப் பெண்… சில நாட்களில் வெளிவந்த புகைப்படம்… தாய் அதிர்ச்சி