தருமபுரி அருகே கடந்த 2 தினங்களுக்கு முன்பு காணாமல் போன 6 வயது சிறுவன், வாய், கைகளை கட்டி வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்து கொலை செய்தது, காவல்துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளது.


தருமபுரி அருகே காட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆதிமூலம் சுதா தம்பதியினருக்கு மதியரசு (6) மற்றும் 3 வயதில் மற்றொரு மகனுடன் வாழ்ந்து வருகின்றனர். ஆதிமூலம் ஜேசிபி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி முதல் சிறுவன் மதியரசு காணவில்லை என உறவினர்கள் மற்றும் கிராமத்தில் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் மனு அளித்துள்ளனர். 


இந்த புகாரை பெற்று கொண்டு கிருஷ்ணாபுரம காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த காவல்துறையினர் அதே கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் 19 என்பவரை சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டதில், அவர் சிறுவன் மதியரசுவை கொலை செய்து அருகில் இருந்த அருந்ததியர் காலனி பகுதியில் பயன்பாட்டிற்கு இல்லாத தண்ணீர் இன்றி காலியாக இருந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் சடலமாக போட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். 


அதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சடலமாக இருந்த சிறுவனை மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து சந்தேகத்திற்கு இடமான வகையில் அதே பகுதியைச் சேர்ந்த  பிரகாஷ் என்பவரை கைது செய்து கொலைக்கான காரணம் குறித்தும், இந்த கொலையில் மேலும் வேறு யாரேனும் தொடர்பு உள்ளார்களா எனவும், மேலும் கடந்த 16 ந் தேதி இரவு அமாவாசை தினம் என்பதால் ஏதேனும் நரபலி கொடுக்கபட்டுள்ளதா எனவும் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.


இந்த விசாரணையில் சிறுவனுடன், பிரகாசம் அடிக்கடி சேர்ந்து கொண்டு விளையாடி வந்ததாகவும், சம்பவத்தன்று சிறுவனை ஆசை வார்த்தை கூறி, அருகில் இருந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் மீது அழைத்துச் சென்று உள்ளே இறங்கி, சிறுவனின் கை, வாயை கட்டி வைத்து, சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும் சிறுவனை வெளியில் விட்டால், நடந்த சம்பவத்தை பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்து விடுவார் என்ற எண்ணத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். சிறிது நேரத்தில் சிறுவன் இறந்ததை உறுதி செய்தவுடன், மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து கீழே இறங்கி பிரகாஷ் சென்றது காவல்துறையினரின் விசாரணையில் பிரகாஷ் ஒப்புக் கொண்டுள்ளார். தருமபுரி அருகே சிறுவனை கடத்திச் சென்று மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண