Crime : மும்பையில் நடுரோட்டில் கல்லூரி மாணவர் ஒருவர் சரமாரியாக குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மும்பை செம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் முக்தார் ஷேக் (19). இவர் அதே பகுதியில் ஒரு கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில், நேற்று மாலை 6.30 மணியளவில் கல்லூரி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, சுனாபட்டி என்ற பகுதியில் இவர் நடந்து சென்று கொண்டிருக்கும்போது, இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் அவரை  வழிமறித்தனர். பின்பு, அவரை அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் முக்தார் ஷேக்கை சராமாரியாக கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.


இதனால் ரத்த வெள்ளத்தில் கிடந்த முக்தாரை அருகில் இருப்பவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர், இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். அப்போது சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.


போலீசார்  கூறியதாவது, ”செம்பூர் பகுதியைச் சேர்ந்த முக்தார், அதே பகுதியில் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணானது முக்தாரை காதலிக்கும் முன் வேறொரு நபரை காதலித்து வந்துள்ளார். அவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளதால் அந்த நபரிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். பின்பு, சில நாட்கள் கழித்து முக்தாரை காதலித்து வந்துள்ளார்.


இதனால் கடும் கோபமடைந்த முக்தார் காதலியின் முன்னாள் காதலன் அவரை கொலை செய்ய  திட்டமிட்டார். இதனை அடுத்து சம்பவத்தன்று, முக்தாரை, அந்த நபரும், அவரின் நண்பருடன் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. மேலும் குற்றவாளிகளான ஆதித்யா திரிபுவன், கல்பாம் சயாத்  என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனை அடுத்து, போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.


மற்றொரு சம்பவம்


முன்னதாக, கர்நாடக மாநிலம் பெங்களூரு சண்போகநஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் இளம்பெண் ராஷி (19). இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் வழக்கம்போல் கல்லூரி சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் இரண்டு பேர் இளம்பெண் முன்பு வழிமறித்து நின்றனர். கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டிவிட்டு அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடினர். ரத்த வெள்ளத்தில் கிடந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.




மேலும் படிக்க


Crime: 16 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை.. பீட்சா கடை ஓனர்.. தன் வாயால் மாட்டிக்கொண்ட மாஃபியா கும்பல் தலைவன்.. நடந்தது என்ன?


Baski Speech: உலகத்திலேயே சிறந்த மூளை கொண்டவர்கள் இவர்கள்தான்... சர்ச்சையான பாஸ்கி பேச்சு- வலுக்கும் கண்டனங்கள்!