திரைப்பட விமர்சகர் பாஸ்கி கிரியேட்டிவிட்டிக்கு பெயர் போனது பிராமணர்கள் என பேசியுள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் கருத்தரங்கம் கடந்த மாதம் கோவையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பட விமர்சகர் பாஸ்கர் என்கிற பாஸ்கி பேசியது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


சர்ச்சை பேச்சு:


இந்த கருத்தரங்கத்தில் பேசிய பாஸ்கி ” பிரம்மண், பிரம்மணு சொல்லுவாங்க கிரியேட்டிவிட்டிக்கு. the best brains in tha world இங்க இருக்கு. அதனால் பிராமண், பிரம்மண் பெரிய வித்தியாசம் இல்லனு தான் நினைக்கிறேன். கிரியேட்டிவிட்டிக்கு பேர் போன இந்த பிராமிண் கம்யூனிட்டி தான் இந்த உலகத்திலையே சுப்ரீம் கம்யூனிட்டி அப்படின்றதுல எந்த சந்தேகமும் இல்லை. அது மட்டும் இல்லை, எனக்கும் என் மனைவிக்கும் அடிக்கடி ஜாலியாக சண்டை வரும், ஏன்னா நான் ஐயர், அவ ஐயங்கார்.


என் மனைவி கார்ட்டூனிஸ்ட் மதனுடைய சகோதரி. அப்பப்ப எங்களுக்குள்ள சண்டை வரப்ப நான் சொல்லுவேன். நான் பிறந்ததுல இருந்து மைலாப்பூர்ல இருக்கேன், யாராவது ரிக்‌ஷாக்காரன் நம்மல பார்த்தாக்கூட ”என்ன ஐயரே எங்கப்போனு..” அப்படிதான் கேப்பாங்க. ஐயங்காரேனு கூப்பிடவே மாட்டாங்க.  இது ஜோக் தான் அதே சமயத்தில யாராவது ஏமாத்திட்டா நல்லா போட்டாங்கலா நாமம் தான் கேப்பாங்க அப்படி சொல்வேன். அதுக்கு என் மனைவி என் அண்ணன் போட்ட பிச்சைல தான் நீ humourist ஆன. அதனால ஐய்யங்கார் தான் கிங்னு சொல்லுவா. இப்படி நாங்க ஜாலியா பேசிப்போம்.


இந்த உலகத்துலையே மிகப்பெரிய புத்திசாலியான சமூகமாக இருந்துட்டு நமக்கு சண்டை வரக்கூடாதுனு நான் நினைக்கிறேன். அதனால நம்மல பிராமிண் கம்யூனிட்டினு சொல்லனும்.. ‘கம்மி’ யுனுட்டினு சொல்லக்கூடாது” என பேசியிருந்தார்.


பலரும் கண்டனம்:


பாஸ்கரின் இந்த பேச்சு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலரும் இவரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.






இது தொடர்பாக தன் ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ள இயக்குநர் நவீன், ”ஆங்கிலம் பேசுவதாலேயே ஒருவன் அறிவாளி ஆகிவிட முடியாது என்பதற்கும், மாடர்ன் உடைகள் அணிவதாலேயே ஒருவன் மாடர்ன் நாகரீக சிந்தனை உடையவனாகிவிட முடியாது என்பதற்கும் இந்த காமெடி ஒரு உதாரணம். அவர் பேசுவது காமெடி இல்லை. அவர்தான் காமெடி ” என பதிவிட்டுள்ளார்.