Crime: மகாராஷ்ராவில் பாஜக பெண் நிர்வாகி அவரது கணவரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


காணாமல்போன பாஜக பெண் நிர்வாகி: 


மகாராஷ்ரா மாநிலம் பாஜக சிறுபான்மை பிரிவு தலைவராக சனாகான் இருந்தார். நாக்பூரில் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் அமித்சாகு. இவர் ஜபல்பூரில் வசித்து வருகிறார். இந்நிலையியில், இவரது கணவரை பார்ப்பதற்காக  சனா கான் ஜபல்பூரிக்கு ஆகஸ்ட் 2ஆம் தேதி சென்றுள்ளார்.


இரண்டு நாட்களில் திரும்பி வந்து விடுவதாக தனது பெற்றோரிடம் தெரிவித்திருந்தார் சனா கான். ஆனால் ஒரு வாரத்திற்கு மேலாக அவர் வீடு திரும்பாமல் இருந்துள்ளார். இதற்கிடையில், இவருக்கும் இவரது கணவருக்கு பணத் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவர்களுக்கு அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. 


கொடூரமாக கெலை செய்த கணவர்: 


இந்நிலையில், ஜபல்பூர் சென்ற சனா கான், அவரது கணவர் அமித் சாகுவை அவரது வீட்டில் சந்தித்தார். ஒரு நாள் முழுவதும் தங்கியிருந்த மறுநாள் இவர்களுக்கு இடையில் சண்டை  ஏற்பட்டு வந்தது. மீண்டும் பணப் பிரச்சனை தொடர்பாக இவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் நீடித்த நிலையில், கைகலப்பாக மாறியது. 


ஒரு கட்டத்தில் கடும் கோபமடைந்த அமித் சாகு, சனா கானின் தலையில் பலமுறை அடித்துள்ளார். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார்.  பின்னர், கொலையை மறைக்க திட்டமிட்டார் அமித் சாகு. முதலில் உடலை அப்புறப்படுத்துவதற்காக உதவிக்கு இரண்டு பேரை அழைத்துள்ளதாக தெரிகிறது. 


ஆற்றில் வீசிய கொடூரம்:


பின்னர், இறந்துபோன சனா கான் உடலை ஜபல்பூரில் இருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹிரன் ஆற்றில் தூக்கிப்போட்டுள்ளார்.  இதற்கிடையில், ஜபல்பூர் சென்ற தனது மகள் காணாமல் போனதாக அவர்களது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், சனா கானின் கணவர் அமித் ஷாகு உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், ஜபல்பூரில் உள்ள ஆற்றில் சனா கானின் உடலை போலீசார் தேடி வருகின்றனர். ஆனால் இன்னும் அவரது உடல் கிடைக்கவில்லை என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 




மேலும் படிக்க 


Crime: இன்ஸ்டாகிராம் லைவில் கொலை.. முன்னாள் மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற கணவர்.. பதறிய மக்கள்..!


Crime : திமுக பெண் கவுன்சிலரை வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய கும்பல் ; கணவர், மகன் மீதும் தாக்குதல்