Crime: சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் லைவில் பெண்ணை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் இந்த கொடூரம் அரங்கேறி வருகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் பெரும்பாலும் அவர்களுக்கு தெரிந்தவர்களாலேயே நடத்தப்படுவதாக அதிர்ச்சி அறிக்கைகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. சமீபத்தில், ஷ்ரத்தா கொலை வழக்கு நாம் எப்படிப்பட்ட சமூகத்தில் இருக்கிறோம் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது.  இந்நிலையில், போஸ்னியாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. 


இன்ஸ்டா லைவில் பயங்கரம்:


ஐரோப்பாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஒரு நாடு போஸ்னியா ஹெர்ச்கோவியா. அந்நாட்டில் வடகிழக்கில் க்ரடகாக் (Gradacac) என்ற நகரம் உள்ளது. க்ரடகாக் பகுதியைச் சேர்ந்தவர் நெர்மின் சுலெமனோவிக் (Nermin Sulejmanovic). 37 வயதான இவர், ஒரு உடற்பயிற்சியாளர். இவர் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில், நேற்று காலை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் தனது பக்கத்தில் ஒரு வீடியோ பதிவிட்டிருந்தார். அதில், நீங்கள் (பயனர்கள்) இன்று ஒரு கொலையை தனது பக்கத்தில் வைவில் காண்பீர்கள் என்று வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ அனைவரையும் கதிகலங்க வைத்துள்ளது. சினிமாவை மிஞ்சும் அளவுக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. 


துப்பாக்கில் சுட்டுக் கொல்லப்பட்ட பெண்:


பின்பு, சிறுது நேரம் கழித்து இன்ஸ்டாகிரம் லைவில் வந்தார் நெர்மின் சுலெமனோவிக். இவர் என்ன செய்ய போகிறார் என்று பயனர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு பெண்ணை ஒரு அறையில் இருந்து அழைத்து வந்து தன் பக்கத்தில் அமர வைத்தார். பின்னர், அருகில் இருந்த துப்பாக்கியை எடுத்து அந்த பெண்ணின் நெற்றியில் சுட்டார்.  இதனால் அப்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை கைது செய்ய விரைந்தனர். அப்போது, நெர்மின் இவர்களிடன் இருந்து தப்பியோடினார். இவரை போலீசார் பிடிக்க முயன்ற போது, வழியில் நெர்வின் இரண்டு பேரை கொடூரமாக சுட்டுக் கொலை செய்துள்ளார்.


முன்னாள் மனைவி:


அதனையும் வீடியோவாக பதிவிட்டிருந்தார். கடையில், காவலர்கள் அவரை நெருங்கும் முன்பு, நெர்மின் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதற்கிடையில், நெர்மின் சுட்டுக் கொன்ற பெண் அவரது முன்னாள் மனைவி என்றும் கடந்த ஆண்டு விவாகரத்து பெற்றதாகவும் தெரிகிறது. இன்ஸ்டாகிரம் லைவ்வில் பெண் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 




மேலும் படிக்க


Nanguneri Incident : பதறவைக்கும் நாங்குநேரி சம்பவம்.. சாதி வெறி மண்ணோடு மண்ணாகட்டும்.. திரைத்துறையினர் கண்டனம்..