Mamannan Box Office : சமூக நீதி பேசும் மாமன்னன்.. இரண்டு நாளில் குவித்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?

மாமன்னன் திரைப்படம் இரண்டு நாட்களில் குவித்துள்ள வசூல் குறித்த விவரத்தை பார்க்கலாம்.

Continues below advertisement

மாமன்னன் திரைப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மாமன்னன் திரைப்படம் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவானது. நடிரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இதுவே தன் திரைப்பயணத்தில் இறுதியான திரைப்படம் என அறிவித்ததால், ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. 

Continues below advertisement

மாமன்னன் வசூல் 

நடிகர் வடிவேலு டைட்டில் கதாபாத்திரத்தில் நடிக்க, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் ஃபாசில், லால் எனப் பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். ஜூன் 29-ஆம் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனங்களே மேலோங்கி வரும் நிலையில், படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், மாமன்னன் படத்தின் வசூல் நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி முதல் நாள் மாமன்னன் திரைப்படம் இந்தியா முழுவதும் ரூ.5.50 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியானது. இரண்டாவது நாளான நேற்று ரூ.4 கோடி வசூலித்ததாகவும் தகவல் வெளியானது.  பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரப்படி இத்தகவல் கிடைத்துள்ளது. ஆக மொத்தம் இரண்டு நாட்களில் இத்திரைப்படம் ரூ.10 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மாமன்னன் திரைப்படம் சுமார் ரூ.35 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது  குறிப்பிடத்தக்கது.

 வார இறுதி நாட்கள்

மேலும் உதயநிதி ஸ்டாலின் திரைப்பயணத்தில் இப்படம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அவரின் திரைப்படங்களிலேயே இப்படத்துக்கு தான் பெரிய ஓப்பனிங் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், வார இறுதி நாட்கள் என்பதால் இன்றும் நாளையும் (சனி, ஞாயிறு)  மாமன்னன் திரைப்படம் இன்னும் கூடுதல் வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வெற்றி நடை போடும் மாமன்னன்

சென்ற மாத இறுதியில் நடைபெற்ற இப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல் ஹாசன் உடபட ஏராளமான திரை பிரபலங்கள் பங்கேற்றனர். இந்த விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜ், நடிகர் கமல்ஹாசன் முன்னிலையில் தேவர் மகன் படத்தை விமர்சித்து பேசியது சமூக வலைதளத்தில் விவாத பொருளானது.  இப்படி பல்வேறு எதிர்பார்ப்பு மற்றும் சர்ச்சைகளுக்கிடையே வெளியாகி உள்ள மாமன்னன் திரைப்படம்  திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இத்திரைப்படம் அதிக அளவில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க 

TNPSC: குஷியில் தேர்வாளர்கள்..! அதிரடியாக உயர்த்தப்பட்ட குரூப்-4 பணியிடங்கள்.. புதிய பட்டியலை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!

Shaheen Afridi: முதல் ஓவரில் நான்கும் ’நச்’ விக்கெட்.. நறுக்கென்று இறக்கிய பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அஃப்ரிடி.. வைரல் வீடியோ!

Continues below advertisement