தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். கிட்டதட்ட தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கு மேலாக தனது நடிப்பாலும், நடன திறமையாலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி, அதில் சிங்கமாய் திகழ்ந்து வருகிறது.  விரைவில் சினிமாவில் இருந்து இவரது நடை அரசியலை நோக்கி நகரும் என இவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் கடந்த ஜூன் 22ம் தேதி தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடினார். 



இவரது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள், மரக்கன்றுகள் வழங்கி கொண்டாடி வந்தனர். 


இந்தநிலையில், தனது பிறந்தநாளுக்கு நலத்திட்ட உதவிகளை செய்த ரசிகர் மன்ற நிர்வாகிக்கு நடிகர் விஜய் கைப்பட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில்,  ”அன்புடையீர் வணக்கம், 


கடந்த ஜூன் 22 அன்று எனது பிறந்த நாளில் நமது மக்கள் இயக்கம் வழியாக நீங்கள் செய்த பல்வேறு நலத்திட்ட உதவிகளை நான் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் வழியாக அறிந்தேன். உங்களது இந்த சிறப்பான செயல்பாடுகளை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.


                                                                                            நன்றி 


                                                                                                                                                                                          பிரியமுடன் 
                                                                                                                                                                                               விஜய் 


அரசியலுக்கு வருகிறாரா விஜய்..? 


தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நடந்து‌ முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு புதுக்கோட்டை, ராணிப்பேட்டை உள்ளிட்ட நகராட்சிகளில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கவுன்சிலர் பதவிகளை கைப்பற்றியுள்ளனர். அதே போன்று எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் தனித்தோ, கூட்டணி வைத்தோ வெற்றி பெற்று நடிகர் விஜய் அரசியலில் காலூன்ற வேண்டும் என்பதற்காக முக்கிய நகரங்களில் மாநாடு நடத்த திட்டம் உள்ளதாக தகவல் வெளியாகிறது.