Priyamani: உங்களுக்கு தெரியுமா? சினிமாவில் பிரியாமணி கிஸ்ஸிங் காட்சிகளில் நடிக்கவே மாட்டார்..காரணம் இதுதான்..!

படத்தில் முத்தமிடுவது தொடர்பான காட்சிகளில் நடிக்கமாட்டேன் என நடிகை பிரியாமணி நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.

Continues below advertisement

படத்தில் முத்தமிடுவது தொடர்பான காட்சிகளில் நடிக்கமாட்டேன் என நடிகை பிரியாமணி நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.

Continues below advertisement

கேரளாவைச் சேர்ந்த பிரியாமணி கடந்த 2004 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘கண்களால் கைது செய்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து பாலுமகேந்திராவின் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக அது ஒரு கனாக்காலம் படத்தில் நடித்தார். பின்னர் மது, மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும், ராவணன், சாருலதா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். 

ஆனால் 2007 ஆம் ஆண்டு பிரியாமணி ஹீரோயினாக நடித்து வெளியான பருத்தி வீரன் படத்திற்காக, அவருக்கு தேசிய விருது கிடைத்தது. எங்கு சென்றாலும் மக்கள் பருத்திவீரன் முத்தழகு என அவரை கொண்டாடுகிறார்கள்.  அப்படி இருந்து தமிழில் பெரிய அளவில் பிரியாமணிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது ரசிகர்களின் ஆதங்கமாக உள்ளது. இப்படியான நிலையில் சமீபத்தில் வெளியான கஸ்டடி படத்தில் முதலமைச்சர் கேரக்டரில் நடித்திருந்தார். மேலும் தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸில் ஹீரோயினாக நடித்தார். இதில் அவர் தொடர்பான ஆபாச காட்சிகளோ, முத்தக் காட்சிகளோ இடம் பெறாதது குறித்து ரசிகர்கள் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

இதனிடையே நடிகை பிரியாமணி 2017 ஆம் ஆண்டு முஸ்தாபா ராஜ் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.  இந்நிலையில் பிரியாமணி தனது படங்களில் லிப் லாக் மற்றும் உடலுறவு தொடர்பான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்பதில் தெளிவாக இருப்பேன் என நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.  ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள அவர், ‘முத்தமிடுவது என்னுடைய கேரக்டரின் ஒரு பகுதி தான் என தெரிந்தபோதும், என்னால் திரையில் சக நடிகர்களுடன் முத்தமிட முடியாது. கணவர் மற்றும் குடும்பத்தை கருத்தில் கொண்டு தான் இந்த முடிவை எடுத்துள்ளேன். திரையில் வேறொரு நபரை முத்தமிடுவதை என்னால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. காரணம் என் கணவருக்கு நான் பதில் சொல்ல வேண்டும். 

இந்த முடிவை நான் பொறுப்பு என நினைக்கிறேன். நானும் என் கணவரும் பார்த்து பழகத் தொடங்கிய போது, படங்களில் எனக்கு முத்தமிடும் காட்சிகள் அமையவில்லை. அப்படி ஒரு வேலை அந்த காட்சி அமைந்திருந்தாலும், நான் அவரிடம் மோசமாக உணர்வதாக தெரிவித்திருப்பேன். என் குடும்பம், கணவர் குடும்பம் நான் படங்களைப் பார்க்கும்போது அவர்களை எந்த சங்கடமான சூழ்நிலையிலும் தள்ள விரும்பவில்லை. அவர்கள் பயப்படுவதை நான் விரும்பவில்லை என பிரியாமணி தெரிவித்துள்ளார்.  

Continues below advertisement
Sponsored Links by Taboola