Crime: ஷாக்! ரூ.70 ஆயிரம் கொடுத்து கல்யாணம்.. கொடூரக் கொலை செய்த கணவன்...சிக்கியது எப்படி?

மனைவியின் நடத்தை சரியில்லை என சந்தேகித்து கணவரே அவரது உறவினர்களுடன் சேர்ந்த கழுத்தை நெரித்து கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

Crime: மனைவியின் நடத்தை சரியில்லை என சந்தேகித்து கணவரே அவரது உறவினர்களுடன் சேர்ந்த கழுத்தை நெரித்து கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

டெல்லியில் தொடரும் கொடூரங்கள்:

சமீப காலமாகவே, குற்றச்செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, நாட்டின் தலைநகர் டெல்லியில் நடக்கும் குற்றச்செயல்கள் கவலை அளிக்கும் விதமாக உள்ளது.  டெல்லியில் நிகழ்ந்த ஷ்ரத்தா கொலை வழக்கு நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, இதேபோன்ற கொலை சம்பவங்கள் பல்வேறு மாநிலங்களில் நிகழ்வது மக்களை உச்சக்கட்ட அச்சத்தில் ஆழ்த்தியது.  இப்படி நாளுக்கு நாள் ஒரு குற்றச் சம்பவங்கள் டெல்லியில் அரங்கேறி வருகிறது.  அந்த வரிசையில் தற்போது ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

காட்டில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்:

டெல்லியில் ஃபதேபூர் பெரி பகுதியில் உள்ள ஜீல் குர்த் எல்லைக்கு அருகே காட்டில் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக  போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, நள்ளிரவு 1.40 மணிக்கு ஒரு ஆட்டோ சென்றுகொண்டிருந்தது. சந்தேகத்தின்பேரில் போலீசார் ஆட்டோவை வழிமறித்து விசாரித்தனர்.  இதனை அடுத்து, அந்த ஆட்டோ நம்பரை கைப்பற்றிய போலீசார் சத்தபூரைச் சேர்ந்த அதன் ஓட்டுநர் அருணை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள் கொலை செய்யப்பட்ட பெண், தனது மைத்துனரான தரம்வீரின் மனைவி ஸ்வீட்டி என அடையாளம் காட்டினார்.

தொடர் விசாரணையில் அருண், தரம்வீர் மற்றும் நாங்லோ ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.  அவர்களிடம் நடத்திய விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தனர். 

விசாரணையில் அம்பலம்:

அதன்படி, பாட்னாவில் இருந்து ஆதரவற்ற பெண்ணான ஸ்வீட்டியை ரூ.70 ஆயிரம் கொடுத்து வாங்கியுள்ளார். பின்னர், ஸ்வீட்டியை திருமணமும் செய்து கொண்டுள்ளார் தரம்வீர். இருப்பினும், ஸ்வீட்டி அவர் பேச்சை கேட்காமல் அடிக்கடி வெளியே சென்று கொண்டிருந்தார். இதனால் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், தரம்வீர் அடிக்கடி சண்டை போடுவதால், ஸ்வீட்டி வீட்டிற்கு வராமல் வெளியில் தங்கி இருக்கிறார்.

இதனால் சந்தேகமடைந்த தரம்வீர், மனைவியை கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். பின்னர், தனது உறவினர்களுடன் ஸ்வீட்டியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதனை அடுத்து, சம்பவத்தன்று ஸ்வீட்டியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், அவரது உடலை ஹரியானா எல்லையில் புதைத்துள்ளனர் என்று வாக்குமூலம் அளித்தனர். 


மேலும் படிக்க 

Jayalalithaa Saree: ஜெயலலிதா சேலைய பிடிச்சு இழுத்து, சிரிச்சத எல்லாம் மறந்துட்டீங்களா? மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Continues below advertisement
Sponsored Links by Taboola