Crime: மும்பையில் காதல் பிரச்னையில் நண்பன் உறுப்புளை வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் பிரபல இரண்டு ஹோட்டல் கடைகளை நடத்தி வருபவர் அஸ்லாம் அன்சாரி (24). இவருக்கு பள்ளி வயதில் இருந்தே ஷமிம் அன்சாரி என்பவர் நெருங்கிய நண்பராக உள்ளார். இவர்கள் தினமும் சந்தித்து பல விஷயங்களை பகிர்ந்து கொள்வது என்பது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஒரு நாள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது காதல் பிரச்னையால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது.

அப்போது, ஷமின் காதலித்து வரும் பெண் மீது அஸ்லாம் அன்சாரிக்கு விருப்பம் இருப்பதாக தெரிவித்தார். அந்த நேரத்தில் கோபமடைந்த ஷமின் அவரை திட்டிவிட்டு சென்றார். பின்பு இருவரும் சில நாட்களாக பேசாமல் இருந்து வந்தனர்.  சில நாட்கள் கழித்து இருவரும் சந்தித்தனர். இந்நிலையில், ஷமின் ஐந்துக்கும் மேற்பட்ட பெண்களை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஷமின் அதில் ஒருவரை கூட உண்மையாக காதலிக்கவில்லை என்று கூறப்படுகிறது.  பெண்களை ஏமாற்ற வேண்டாம் என்றும், அவர்களில் ஒருவரை உண்மையாக காதலிக்க வேண்டும் என்றும் ஷமியிடம் அறிவுரை சொல்லியதாக கூறப்படுகிறது. எனினும், அஸ்சாமி கூறியதை, ஷமி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பின்பு ஷமினின் தோழிகளில் ஒருவரை அஸ்சாமி காதலிப்பதாக தெரிவித்தார். இதற்கு கோபமடைந்த ஷமின் அவருடன் தகராறில் ஈடுபட்டார்.

ஷமின் அதற்கு மறுப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. இதற்கு கோபமடைந்த அஸ்லாம் அவருடன் சண்டையில் ஈடுபட்டார். பின்பு, ஷமியின் அந்தரங்க உறுப்பை வெட்டிவிடுவேன் என்று அஸ்லாம் எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இருவரும்  ஒரு ஹோட்டலில் பார்ட்டியில் இருந்தபோது, ​​காதல் பிரச்னையால் இருவருக்கு அந்த இடத்தில் மீண்டும் தகராறு ஏற்பட்டது. கோபத்தில் ஷமிமை அடித்து, அவரது கண்கள் மற்றும் ஒன்பது உடல் பாகங்களிலும் கத்தியால் குத்தியுள்ளனர். பின்பு ஷமினின் அந்தரங்க உறுப்புகளை வெட்டி  அவரது வாயிலையே திணித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்பு சுயநினைவிற்கு வந்த அஸ்லாம் அந்த இடத்தை விட்டு தப்பியோடினார்.

இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும், குற்றம் சாட்டப்பட்டவரை தேடி வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Crime: எப்போதும் சமூக வலைதளம்... துணை நடிகையை கொன்ற கணவர்...! நடந்தது என்ன?.

Kanchipuram Lakes: மீண்டும் அடித்து வெளுக்கும் மழை.. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஏரிகளின் நிலவரம் இதோ..!