திருப்பூரில் டிக்-டாக் மூலம் பிரபலமாகி திரைப்படங்களில் நடிக்கச் சென்ற மனைவியை கழுத்தை நெரித்து கணவர் கொலை செய்தார். அவரை போலீஸார் கைது செய்தனர்.


திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம் (38), இவர் தனது மனைவி சித்ரா (35) மற்றும் இரண்டு மகள்களுடன் திருப்பூர் செல்லம் நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். 
திருப்பூர் தென்னம்பாளையம் காய்கறி சந்தையில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சித்ரா டிக்டாக்கில் அதிக ஈடுபாடு கொண்டவர் எனக் கூறப்படுகிறது. டிக்டாக் தடை செய்யப்பட்ட பின்னர் ரீல்ஸ், இன்ஸ்டாகிராம் என  சமூக வலைத்தளத்தில் தனது நேரத்தை அதிக அளவில் செலவழித்துள்ளார்.


இதில் அதிகம் பின்தொடர்பவர்கள் கிடைத்த நிலையில் அதன் மூலம் கிடைத்த திரைத் துறை நண்பர்கள் உதவியுடன் சினிமாவில் நடிக்க வேண்டும் என கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சித்ரா தனியாக சென்னையில் குடியேறியுள்ளார்.


இந்நிலையில் திருப்பூரில் நடைபெற்ற தனது மூத்த மகளின் திருமணத்தில் பங்கேற்றுள்ளார். மகளின் திருமணம் முடிந்த பிறகு, மீண்டும் சென்னைக்கு போவதாக கணவரிடம் கூறியுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த அமிர்தலிங்கம், சித்ரா கழுத்தில் அணிந்திருந்த துப்பட்டாவால் அவர் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். 


நேற்று காலை வெகுநேரம் ஆகியும் சித்ராவின் நடமாட்டம் இல்லாததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டிற்குச் சென்று பார்த்தனர். அப்போது கழுத்தில் காயத்துடன் சித்ரா இறந்து கிடந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர், காவல் துறைக்கு புகார் கொடுத்தனர்.


இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த அமிர்தலிங்கத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Gold seized in Chennai airport: சென்னை விமான நிலையத்தில் சிக்கிய ரூ.51.42 லட்சம் மதிப்பிலான தங்கம்!


முன்னதாக, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கழனிபாக்கம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவரது மணி மனைவி சுதமதி வயது 25. இருவரும் காதலித்து 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டு மதுராந்தகம் கழனிபாக்கம் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தையும் மற்றும் இரண்டு வயதில் மற்றொரு ஆண் குழந்தையும் உள்ளது. 


Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!


இந்நிலையில் சுதமதி மற்றும் ரஞ்சித் குமார் ஆகிய தம்பதி இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டையிட்டுக் கொள்வது வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சுதமதி, துணிகள் அயன் செய்து கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக கணவன் ரஞ்சித் குமார் கூறியுள்ளார். மின்சாரம் தாக்கி உயிரிழந்தது குறித்து காவல்துறையினருக்கு தெரிந்தால், உயிரிழந்த சுதமதி உடலை உடல்கூறாய்வு செய்வார்கள் எனவும், அதற்குள் நாம் இறுதி சடங்கு செய்து விடலாம் எனவும் உறவினர்களிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து உயிரிழந்த சுதமதி உடலுக்கு அவசர அவசரமாக, இறுதிச் சடங்கு செய்ய   முயற்சி செய்துள்ளார்கள்.