திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆலம்பாடி ஊராட்சி கொல்லப்பட்டி அருகே செட்டியூர் செல்லும் சாலையில்  குஜிலியம்பாறை அருகே செயல்பட்டு வரும் செட்டிநாடு  சிமெண்ட் ஆலைக்கு சொந்தமான கல்குவாரியில் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு போலீசாரும் குஜிலியம்பாறை தீயணைப்புத் துறையினரும் சென்று கல்குவாரியில் மிதந்துகொண்டிருந்த சடலத்தை மீட்டனர் .


IND vs AUS, LIVE Score: வார்னரை காலி செய்த ஷமி.. 2 ரன்களுக்குள் 2 விக்கெட்களை இழந்த ஆஸ்திரேலியா..!




சடலத்தை மீட்டதில் சுமார் 28,30 வயது மதிக்கத்தக்க இளைஞர்  அடையாளம்  தெரியாத நபர் என்பதும் ஒரு வாரத்திற்கு மேலாக கல்லை கட்டி வீசி இருக்கக்கூடும் என  தெரிய வந்தது. மேலும் அவர் அணிந்திருந்த ஆடையில் ராம் பாய்ஸ் கபடி குழு காங்கயம் என்று எழுதப்பட்டுள்ளது.


Indonesia Earthquake: மீண்டும் நிலநடுக்கம்.. இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 4 பேர் உயிரிழப்பு..




குஜிலியம்பாறை வட்டாட்சியர் ரமேஷ் தலைமையில் ஆய்வு செய்ததில் இங்கு செயல்பட்டு வரும் சிமெண்ட் ஆலைக்கு சொந்தமாக ஆலம்பாடி, மல்லபுரம், கோட்டநத்தம், சேர்வைக்காரன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது  என்றும் இன்று இளைஞரை  கல்லை கட்டி கொலை செய்யப்பட்ட கல்குவாரியில் கடந்த 10 ஆண்டு காலமாக ஒரு இளம் பெண் உள்பட மூன்று பேர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தெரியவந்துள்ளது. அடையாளம் தெரியாத அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலத்தை உடல் கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண