பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற கொடூர தந்தை - போலீசிடம் சிக்கியது எப்படி?

முதலில் சிறுமியின் ஒரு கையையும் காலையும் டவலால் கட்டியதாக குற்றம் சாட்டப்பட்டவர் கூறினார். இதையடுத்து, கிணற்றில் வீசியுள்ளார்.

Continues below advertisement

பெற்ற மகளையே தந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொன்ற அதிர்ச்சி சம்பவம் மத்திய பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

Continues below advertisement

நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முக்கியமாக சிறுமிகளுக்கு நேரும் பாலியல் கொடுமைகள் அதிகரித்தவண்ணமே தொடர்கிறது. போஸ்கோ சட்டம் வந்த பிறகும், இதுதொடர்பான புகார்கள் அதிகரித்தே காணப்படுகிறது. பெண்கள், சிறுமிகளுக்கு வெளிநபர்களால் தான் இந்த தொல்லைகள் எல்லாம் வரும் என்று நாம் நினைத்திருந்தால் அது தவறு. அவர்களை சார்ந்தவர்கள், நெருங்கிய உறவினர்கள் மூலமே அவர்கள் இந்த கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர். அதுபோல அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் குணா நகரில் 8 வயது சிறுமி தனது சொந்த தந்தையால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் சடலம் கடந்த சனிக்கிழமை குணாவில் உள்ள கிணற்றில் மிதந்ததுடன், குற்றம் சாட்டப்பட்ட தந்தை ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டிலுக்கு அடியில் மறைந்து கொண்டு பாலியல் சீண்டல்... ரத்தம் சொட்ட சொட்ட ஓடிய மர்மநபர்... திண்டிவனத்தில் பரபரப்பு

சம்பவம் நடந்த பகுதி, குணா மாவட்டத்தின் சச்சௌரா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது. இந்நிலையில், சனிக்கிழமை கிணற்றில் சிறுமியின் சடலம் மிதப்பதை கிராம மக்கள் கண்டனர். இது, புதன்கிழமை முதல் காணாமல் போன சிறுமியின் சடலம் என்பது தெரியவந்தது. அவரை காணவில்லை என குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அவர்களுக்கு சிறுமியின் தந்தை மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. காரணம், இந்த சம்பவம் நடந்த பிறகு,  நாள் முழுவதும் வீட்டிலேயே இருந்துள்ளார். தாயும் சிறுமியின் தாத்தாவும் மகளைக் கண்டுபிடிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர். மேலும், விசாரணையின் போது அவர் சரியாக ஒத்துழைக்கவில்லை. மேலும் விசாரணையில், சிறுமி கடைசியாக தந்தையுடன் காணப்பட்டது தெரியவந்தது.

”வேலியே பயிரை மேய்ந்த கதை” - ஆசிரியர்களே மாணவர்களை மிரட்டி பாலியல் சீண்டல் - நெல்லையில் நடந்த கொடுமை

இதனைத்தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை சிறுமியின் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டவுடன், குற்றம் சாட்டப்பட்ட தந்தை காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். காவல்துறையின் தீவிர விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். முதலில் சிறுமியின் ஒரு கையையும் காலையும் டவலால் கட்டியதாக குற்றம் சாட்டப்பட்டவர் கூறினார். இதையடுத்து, கிணற்றில் வீசியுள்ளார். இதற்கு முன், அவர் ஒரு பண்ணையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்தது போலீசாரையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பெற்ற மகளை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொன்ற சம்பவம் அம்மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola