மயிலாடுதுறை அருகே அசிக்காடு கிராமத்தில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் உள்ளிட்ட 9 கோயில்களின் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு  செய்தனர்.


பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் திருக்கோயில்


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா அசிக்காடு கிராமத்தில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. கோயிலில் எழுந்தருளியுள்ள அம்பிகையை உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூரில் வசிக்கும் ஏராளமானோர் குலதெய்வமாக வழிபாடு செய்து வருகின்றனர். மேலும் இக்கோயிலில் பக்தர்கள் வேண்டுதல் அனைத்து நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை என்பதால் திரளான பக்தர்கள் நாள் இங்கு வருகை தந்து தங்களின் வேண்டுதலை அம்பாளிடம் வைத்து செல்கின்றனர்.




இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோயில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பாபிஷேக விழா செய்ய அவ்வூர் பொதுமக்கள், பக்தர்கள் முடிவெடுத்தனர். அதனை தொடர்ந்து ஊர் முக்கியஸ்தர்கள் ஒன்றிணைந்து கோயில் குடமுழுக்குக்கான பூர்வாங்க பணிகளை தொடங்கினர். தொடர்ந்து கோயிலை புதுப்பித்தல், புதிய கட்டிடங்கள் கட்டுதல், வண்ணம் தீட்டுதல், சிலை அமைத்தல் உள்ளிட்ட திருப்பணிகளை செய்தனர்.  பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றதை அடுத்து கோயில் குடமுழுக்கு விழாவிற்கு நாள் குறித்து, அதனை தொடர்ந்து குடமுழுக்கு தினத்தில் மகா கும்பாபிஷேகம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.




பூர்வாங்க பூஜைகள்


கடந்த வெள்ளிக்கிழமை விக்னேஸ்வரன் பூஜையும், அதனைத் தொடர்ந்து முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேக தினத்தில் நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுற்று மகா பூர்ண குதி மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது.




யாகசாலை பூஜை 


பின்னர் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடம் புறப்பாடு நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் புனிதநீர் அடங்கிய கடங்களை யாகசாலையில் இருந்து தலையில் சுமந்து மேளதாள மங்கல வாத்தியங்கள் முழங்க கோயிலை சுற்றி வலம் வந்து, கோயில் கோபுர கலசங்களை அடைந்தனர். தொடர்ந்து மல்லாரி இசை வாத்தியங்கள் முழங்க வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் ஓத புனிதநீரை கோபுர கலசங்களில் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மூலஸ்தானத்தில் உள்ள மூலவ தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் இன்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரம் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.




குடமுழுக்கு நடைபெற்ற கோயில்கள்


இதுபோல கிராமத்தில் விநாயகர், முருகன், மகாலிங்க சுவாமி, பிடாரி அம்மன், மன்மத சுவாமி, மண்ணடி வீரன், பேச்சியம்மன், நவகிரகத்திற்கு என தனித்தனி கோயில்கள் அமைந்துள்ளன. இந்த 9 கோயில்களில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு  ஒரு சேர கும்பாபிஷேகம் நடைபெற்றது.  கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 13 ஆம் தேதி பூர்வாங்க பூஜைகள் மற்றும் 14 ஆம் தேதி முதல் காலை யாகசாலை பூஜைகளும் தொடங்கியது. கும்பாபிஷேக தினத்தில் நான்காம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து மகா பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது.


கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சிவனடியார்கள் தர்ணா - காரணம் என்ன?


தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு வளர்பிறை, திரியோதசி  சிரவிஷ்ட நட்சத்திரம், சித்தயோகம் கூடிய 9 மணி முதல் 10:30 மணிக்குள் துலா லக்னத்தில் விநாயகர், முருகன், மகாலிங்க சுவாமி, பிடாரி அம்மன், மன்மத சுவாமி, மண்ணடி வீரன், நவகிரகம், பேச்சியம்மன் கோயில்கள், இறுதியாக முத்து மாரியம்மன் கோயில் விமான கலசங்களுக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஓத சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். கும்பாபிஷேகத்தை சர்வ சாதகம் கோபால சிவாச்சாரியார் தலைமையிலானோர் நடத்தி வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.