Crime : சொத்து தகராறில் ஓடும் பேருந்தில் பெண் ஒருவர் கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கணவாய்ப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கோபி. இவரின் மனைவி தமயந்தி (42). கோபி என்பவர் ஆட்டோ ஓட்டுநராக அதே பகுதியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தனியார் தொண்டு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.


கோபிக்கு அதே பகுதியில் வசித்து வரும் அவரின் அண்ணன் ராஜாங்கத்துக்கும் இடையே நீண்ட நாட்களாகவே சொத்து தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவர்களுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. இந்த சொத்து பிரச்சனை தொடர்பாக திண்டுக்கல் நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வருகிறது. 


இந்நிலையில், தனியார் தொண்டு நிறுவனத்தில் வேலை பார்க்கும் தமயந்தி, நேற்று மாலை 4 மணியளவில் சொத்து பிரச்சனை தொடர்பாக வழக்கறிஞரைச் சந்திப்பதற்காக திண்டுக்கல்லுக்கு தனியார் பேருந்தில் புறப்பட்டார்.   தமயந்தி ஏறிய பேருந்தில் அவரது கணவரின் அண்ணன் ராஜாங்கம் ஏறினார். உலுப்பக்குடியிலிருந்து திண்டுக்கல்லை நோக்கிச் சென்ற பேருந்தில் ராஜாங்கம் அவரின் 14 வயது மகனுடன் ஏறினார். 


அந்த பேருந்து கோபால்பட்டியை அடுத்த வடுக்கம்பட்டி அருகே வந்தபோது, ராஜாங்கம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தமயந்தியின் கழுத்தை வெட்டியுள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். தமயந்தியை வெட்டிவிட்டு அந்த இடத்தில் தனது மகனை விட்டுவிட்டு, பேருந்தில் இருந்து தப்பியோடினார்.


பேருந்து சீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த தமயந்தியை அருகில் இருந்தவர்கள் மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த சாணார்பட்டு போலீசார் தமயந்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.


இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ராஜாங்கத்தை தேடி வருகின்றனர். சொத்து தகராறில் ஓடும் பேருந்தில் பெண் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் படிக்க


Crime: கழுத்தை நெரித்துக் கொன்றேன்.. வெளிநாட்டில் மனைவி, 2 குழந்தைகளைக் கொன்ற கணவர் ஒப்புதல்.. பதைபதைக்கும் வாக்குமூலம்


புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி பரப்பிய வழக்கு: மனீஷ் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு


CM Stalin : ‘மாநில நலனுக்கு எதிரான வகையில் செயல்பட்டு வரும் ஆளுநர்’ : முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்