இயேசு கிறிஸ்துவை சித்ரவதை செய்து சிலுவையில் அறைந்த இந்த நாளை புனித வெள்ளியாக கொண்டாடும் நிலையில், அவர் மக்களுக்கு அளித்ததாக கூறப்படும் போதனைகளை அறிந்து கொள்வோம்.


புனித வெள்ளி


ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய வெள்ளிக்கிழமை புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது மற்றும் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளாக நினைவுகூரப்படுகிறது. கிறிஸ்தவர்களின் இந்த முக்கியமான தினம் இந்த ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி (இன்று) அனுசரிக்கப்படுகிறது. கிறிஸ்தவ வரலாற்றில் புனித வெள்ளி துக்க நாளாகவும், இயேசு கிறிஸ்துவின் தயாகத்திற்கு மரியாதை செலுத்தும் நாளாகவும் அனுசரிக்கப்படுகிறது. இயேசு பாடுபட்ட நாட்களான 40 நாட்களை தவக்காலமாக அனுசரித்து அதன் தலையாய நாளான இன்று உண்ணாவிரதத்துடன் முடிப்பார்கள். ஜெர்மனியில், புனித வெள்ளி "கார்ஃப்ரீடாக்" என்று அழைக்கப்படுகிறது, அதற்கு "துக்ககரமான வெள்ளி" என்று பொருள்.



சிலுவையில் அறையப்பட்ட நாள்


இயேசு கிறிஸ்து தன்னை யூதர்களின் ராஜா என்று அறிவித்ததற்காக குற்றவாளியாக்கப் பட்டார் என்று நற்செய்தி கூறுகிறது. புனித வெள்ளி மனிதகுலத்திற்காக இயேசு கிறிஸ்து செய்த தியாகத்தின் நாளாக அறியப்படுகிறது. இயேசு கிறிஸ்து அவரது சீடர்களில் ஒருவரான யூதாஸ் இஸ்காரியோட்டால் காட்டிக் கொடுக்கப்பட்டார், இது இயேசு கிறிஸ்துவின் கைதுக்கு வழிவகுத்தது. அதனைத் தொடர்ந்து இரக்கமற்ற சித்திரவதைகளை அனுபவித்த அவரை இறுதியாக சிலுவையில் அறைந்தனர்.


தொடர்புடைய செய்திகள்: Bhanuka Rajapaksa Injury: முழங்கையிலே ஓங்கி அடித்த தவான்..! 1 ரன்னில் பெவிலியனுக்கு நடையை கட்டிய பனுகா ராஜபக்சே..!


பாடுபட்ட 40 நாட்கள்


தன் வாழ்நாள் முழுவதும் இயேசு கிறிஸ்து மக்களுக்காக செய்த தியாகங்களை நினைவுகூரும் நாளாக இந்த அனுசரிக்கப்படுகிறது. அவர் பாடுபட்ட இந்த நாற்பது நாட்களிலும், மற்ற நேரங்களிலும் மக்களுக்கு தேவையான, வாழ்வதற்கு அவசியமான கருத்துகளை இயேசு கிறிஸ்து சொல்லி சென்றிருக்கிறார். அவரது மரண தினமாகவும், உயிர்ப்பு தினமாகவும் இந்த நாட்களை பலர் கொண்டாடுவதே அது போன்ற போதனைகளை நினைவு கூறத்தான். புனித வெள்ளியை முன்னிட்டு, இயேசு கிறிஸ்துவின் சில போதனைகள் மற்றும் மேற்கோள்கள் இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.



இயேசு கிறிஸ்துவின் போதனைகள்



  • இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள், ஏனெனில் அவர்களுக்கும் இரக்கம் காட்டப்படும்.

  • எனவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்… கேளுங்கள், கொடுக்கப்படும்; தேடுங்கள், கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்கான கதவு திறக்கப்படும்.

  • பரிசுத்த ஆவியின் வல்லமையினால் நீங்கள் நம்பிக்கையில் பெருகும்படி, நம்பிக்கையின் தேவன் மகிழ்ச்சியினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக.

  • நாளையைப் பற்றி கவலைப்பட வேண்டாம், நாளைக்கான கவலையை நாளை பட்டுக்கொள்ளலாம். அன்றன்றைக்கு உள்ள பிரச்சனையே போதுமானது.

  • கலங்காதீர்கள்; கடவுளை நம்புங்கள்; என்னை நம்புங்கள்!

  • மற்றவர்கள் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அதையே அவர்களுக்கு நீங்கள் செய்யுங்கள்.