புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி பரப்புவதில் சூத்திரதாரியாக செயல்பட்ட மனீஷ் காஷ்யப் மீது தமிழ்நாட்டில் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. புலம்பெயர் தொழிலாளர் பற்றி வதந்தி பரப்பியது மட்டுமின்றி ஏற்கெனவே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் மனீஷ் காஷ்யப்.







புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி:


வதந்தி பரப்பியதாக கைது செய்யப்பட்டுள்ள மனீஷ் காஷ்யப் வங்கி கணக்குகளை பீகார் மாநில பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் முடக்கியது. பீகாரில் கைதானவரை தமிழ்நாடு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. காவல்துறையால் முடக்கப்பட்டுள்ள காஷ்யப்பின் 4 வங்கிக் கணக்குகளில் ரூ.42.11 லட்சம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. காஷ்யப்பின் வங்கிக் கணக்குகளில் உள்ள பணம், வதந்தி பரப்புவதற்காக வழங்கப்பட்டதா என காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. சித்தரிக்கப்பட்ட வீடியோக்களை எடுக்க மனீஷ் காஷ்யப்புக்கு உதவியவர்கள் யார் எனவும் காவல்துறை விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் போலி வீடியோக்களை பகிர்ந்த மனீஷ் காஷ்யப் என்ற யூடியூபர் மீது பெருங்குடியை சேர்ந்த ஜெகதீசன் என்பவர் மதுரை மாவட்ட சைபர்கிரைம் பிரிவு போலீசிடம் புகார் மனு கொடுத்தன் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பீகாரில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த மனீஷ் காஷ்யப்பை தமிழகம் அழைத்து வந்து காவல்துறை விசாரணை செய்வதற்காக மனீஷ் காஷ்யப்பை கடந்த 30ம் தேதி மதுரை மாவட்ட முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி டீலாபானு முன்னிலையில் மனீஷ் காஷ்யப்பை ஆஜர்படுத்திய நிலையில் 3 நாள் போலீஸ் காவலில் விசாரணை செய்ய உத்தரவிட்டார்.


இதனையடுத்து இந்த வழக்கு நேற்று தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நேற்று காலை மீண்டும் நீதிபதி டீலா பானு முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து யூடியூபர் மனீஷ் காஷ்யப்பிற்கு வரும் 19ஆம் தேதிவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்ட நிலையில் மனீஷ் காஷ்யப் மதுரை மத்திய சிறைக்கு காவல்துறை பாதுகாப்புடன் அழைத்துசெல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - 'உச்சி பனை மரத்துக்கு நொடியில ஏறுவேன்.. ஆனா இன்னைக்கு நிலைமை' - பனை தொழிலாளி வேதனை