Delhi Crime: டெல்லியில்  துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் பாகங்களை போலீசார் இன்று மீட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.


டெல்லியில் நிகழ்ந்த ஷ்ரத்தா கொலை வழக்கு நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஷ்ரத்தாவை அவரது காதலன் ஆப்தாப் கொலை செய்து, அவரின் உடலை 35 பாகங்களாக வெட்டி எறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.


டெல்லியில் தொடரும் கொலைகள்


இதைத்தொடர்ந்து, இதேபோன்ற கொலை சம்பவங்கள் பல்வேறு மாநிலங்களில் நிகழ்வது மக்களை உச்சக்கட்ட அச்சத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், ஷர்த்தா கொலை வழக்கை போலவே  தற்போது டெல்லியில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. எப்போதும் பரபரப்பாகும் இருக்கும் டெல்லியில் இன்று காலை 9.15 மணிக்கு போலீசாருக்கு அதிர்ச்சி தகவல் ஒன்று கிடைத்தது. டெல்லி கீதா காலணி பகுதியில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு டெல்லி போலீசார் விரைந்து சென்றனர்.


அங்கு ஆய்வு செய்த போலீசார், பெண்ணின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பெண்ணின் தலை அங்கிருந்த பாலத்திற்கு அருகே கிடைத்துள்ளது. அந்த பகுதியைச் சுற்றி போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு பெண்ணின் எஞ்சிய உடல் பாகங்கள் கிடைத்துள்ளன.


இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்ட பெண் யார்? பெண்ணை கொலை செய்தது யார் என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், மீட்கப்பட்ட உடல் பாகங்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் பெரும்பாலும் அவர்களுக்கு தெரிந்தவர்களே நடத்தி வருகிறனர். டெல்லி ஷர்த்தா கொலை சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், தற்போது அதே போன்று ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் படிக்க 


DMK Councilor: திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை? - நாமக்கலில் பரபரப்பு சம்பவம்


Bangaluru Double Murder: “கெட்டவர்களையே காயப்படுத்துகிறேன்; நல்லவர்களை அல்ல” - எம்.டி, சிஇஓவை கொலை செய்த முன்னாள் ஊழியர்: பரபரப்பு சம்பவம்