ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அப்துல்லா அபுபக்கர் (Abdulla Aboobacker) தங்கம் வென்றுள்ளார்.
தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் 25-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆடவர் மும்முறை தாண்டும் பிரிவில் அப்துல்லா அபூபக்கர் தங்கம் வென்றுள்ளார். இந்தத் தொடரில் பந்தய இலக்கை 16.92 விநாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். இதுவே நடப்பு தொடரில் அதிகப்பட்சமாகும். இதன்மூலம் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவிற்கு மூன்றாவது தங்கம் கிடைத்துள்ளது.
இதன் தொடக்க நாளில் அபிஷேக் பால் வெண்கலப் பதக்கம் வென்றார். மூன்று இந்தியர்கள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் அபிஷேக் பால் 29 நிமிடம் 33.26 வினாடிகளில் இலக்கை கடந்து 3-வது இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கத்தை வசப்படுத்தினார். ஜப்பானின் ரென் தஜவா (29 நிமிடம் 18.44 வினாடி) தங்கப்பதக்கமும், கஜகஸ்தானின் கோச் கிமுடாய் ஷட்ராக் வெள்ளிப்பதக்கமும் (29 நிமிடம் 31.63 வினாடி) பெற்றனர்.
மகளிருக்கான் 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தில் ஜோதி யர்ராஜி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். 23 வயதான யர்ராஜி 13.09 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப் பதக்கத்தை வென்றார்.
அவருக்கு அடுத்தபடியாக ஜப்பானிய ஓட்டப்பந்தய வீரர்களான டெராடா அசுகா (13.13 வினாடிகள்) மற்றும் அயோகி மசுமி (13.26 வினாடிகள்) இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்தனர். நான்காம் இடத்தை பிடித்த இந்திய வீராங்கனையான ராம்ராஜ் நித்யா பந்தய தூரத்தை 13.55 வினாடிகளில் கடந்தார். மேலும் 1500 மீட்டர் ஓட்டத்தில் அஜய்குமார் சரோஜ் தங்கம் வென்று அசத்தினார். மும்முறை தாண்டுதலில் அப்துல்லா அபூபக்கரும் தங்கம் வென்றுள்ளார். பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் ஐஸ்வர்யா மிஸ்ரா வெண்கலம் வென்றுள்ளார்.
16-ம் தேதி வரை நடைபெறும் போட்டியில், இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த குண்டு எறிதல் வீரர் கரன்வீர் சிங், 400 மீட்டர் ஓட்டப்பந்தய வீராங்கனை அஞ்சலி தேவி ஆகியோர் ஊக்க மருந்து சோதனையில் சிக்கியதால் அணியில் இருந்து நீக்கப்பட்டனர். நீளம் தாண்டுதல் வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின்,. டிரிபிள் ஜம்ப் வீரர் பிரவீன் சித்ரவேல், ஈட்டி எறிதல் வீரர் ரோகித் யாதவ் ஆகியோர் காயம் காரணமாக கடைசி நேரத்தில் போட்டியிலிருந்து விலகினர். சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வீர்களும் இதில் பங்கேற்கின்றனர்.
மேலும் வாசிக்க..