Ashwin : "WTC இறுதிப்போட்டியில் சேர்க்காமல் இருக்க டிராவிட் என்னை இப்படித்தான் ப்ரெயின்வாஷ் செய்தார்…" அஷ்வின்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அவரை ஆடும் லெவனில் இருந்து தவிர்த்த நிலையில், அதனை அவரிடம் கூறி எப்படி தலைமை பயிற்சியாளர் "மூளை சலவை" செய்தார் என்று வெளிப்படுத்தி உள்ளார்.

Continues below advertisement

கடந்த மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் 1 பந்துவீச்சாளர், சேர்கப்படாதது பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்தது. அதன் பிறகு இந்திய ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின், புதன் கிழமை தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் லெவன் அணிக்கு திரும்பியதோடு, 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்த இன்னிங்ஸ் இல், 24.3 ஓவர்கள் வீசி, 5/60 என்று பந்து வீசி தனது ஃபார்மை மீண்டும் ஒருமுறை நிரூபித்தார். அஸ்வினுக்கு அவரது கிரிக்கெட் கரியரில் ஏற்றம் மற்றும் இறக்கங்கள் மாறி மாறி இருந்தபோதிலும், 36 வயதான அஷ்வினின் தற்போதைய நிலை குறித்து நிம்மதியாக இருப்பதாக தெரிகிறது. 

Continues below advertisement

கிரிக்கெட் வாழ்கை வேகமாக போய்விட்டது

"உண்மையில் நான் எனது வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது, ​​அது எப்படி இவ்வளவு வேகமாகப் போய்விட்டது என்று நான் ஆச்சரியப்படுகிறேன். சர்வதேச கிரிக்கெட் பயணத்தில் இப்போது எனக்கு 14 ஆண்டுகள் ஆகிறது, ஐபிஎல்லையும் சேர்த்தால், அது கிட்டத்தட்ட 15-16 ஆண்டுகள் பயணம். அது மிக வேகமாக போய்விட்டது," என்று முதல் நாள் ஆட்டம் முடிந்த பின் அஸ்வின் கூறினார். அதோடு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அவரை ஆடும் லெவனில் இருந்து தவிர்த்த நிலையில், அதனை அவரிடம் கூறி எப்படி தலைமை பயிற்சியாளர் "மூளை சலவை" செய்தார் என்று வெளிப்படுத்தி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்: IND vs WI Test: அஸ்வின், ஜடேஜா சுழலில் மாயம்.. 150 ரன்களுக்கு சுருண்ட மேற்கிந்திய தீவுகள்.. இந்தியா அபாரம்..!

அணியாக செயல்படுவதையே டிராவிட் விரும்பினார்

அதுகுறித்து பேசுகையில், "உண்மையில் நான் எனது வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது, ​​அது எப்படி இவ்வளவு வேகமாகப் போய்விட்டது என்று நான் ஆச்சரியப்படுகிறேன். ஆனால் WTC டெஸ்ட் அணியில் இடம் இல்லை. ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக நான் முதன்முதலில் சந்தித்தபோது அவர் இவ்வாறு கூறினார்: 'எத்தனை விக்கெட்டுகளை எடுத்தீர்கள், எத்தனை ரன்கள் எடுத்தீர்கள் என்பது முக்கியமல்ல, நீங்கள் அனைத்தையும் மறந்துவிடுவீர்கள். ஒரு அணியாக நீங்கள் உருவாக்கும் சிறந்த நினைவுகள் மட்டுமே உங்களுடன் ஒட்டிக்கொள்ளும் என்று கூறினார்," என்று புதனன்று 33 வது முறையாக ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றிய அஷ்வின் கூறினார்.

மூளை சலவை செய்தாரா?

"அதற்கு நான் முற்றிலும் பின்தங்கியிருக்கிறேன், அவர் என்னை மூளை சலவை செய்தாரா என்று எனக்குத் தெரியவில்லை, என் பார்வையில், இந்த பயணம் என்ன நடந்தது என்பதை நினைவில் கொள்ள முடியாத அளவுக்கு வேகமாக சென்றது என்று நான் நினைக்கிறேன். அது எப்படி சென்றது என்று எனக்கு தெரியவில்லை. என் கிரிக்கெட் பயணத்திற்கும், விளையாட்டு எனக்கு வழங்கியதற்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்." என்றார்.

Continues below advertisement