Crime : கடலூரில் மனைவி உறவினர் வீட்டிற்கு சென்ற சோகத்தில் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவன் - மனைவி சண்டை:
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் வீரசேகரன் (30). இவர் மயிலாடுதுறை மாவட்டம் ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி கவிப்பிரியா. இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் இவர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனைவி கவிப்பிரியா கோபமடைந்து அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதன் பின், வீரசேகரன் பலமுறை மனைவி கவிப்பிரியாவை தொடர்பு கொண்டு வீட்டிற்கு வரும்படி கூறியுள்ளார். ஆனால் கவிப்பிரியா வீட்டிற்கு வர மறுத்ததோடு வீரசேகரனை கடுமையாக பேசியுள்ளார்.
தூக்கிட்டு தற்கொலை:
இதனை அடுத்து கடும் மனஉளைச்சலில் வீரசேகரன் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நேற்று காலை தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப் போட்டு கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் வீரசேகரனை பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனை அடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி கோபித்துக் கொண்ட உறவினர் வீட்டிற்கு சென்ற சோகத்தில் கணவர் வீரசேகரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை தீர்வல்ல:
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
மேலும் படிக்க
Crime: ரசப் பாத்திரத்தில் தவறி விழுந்த இளைஞர் உயிரிழப்பு... சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!