மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு மற்றும் மாப்படுகை ஊராட்சி பகுதியை சேர்ந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு கிட்டப்பா பாலம் அருகே காவிரி ஆற்றங்கரையில் இறந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்யும் சுடுகாடு மற்றும் கருமாதி கரையும் அமைந்துள்ளது. ஆகையால் அப்பகுதி மக்கள் அங்கு இறுதி சடங்குகளை காலம் காலமாக செய்து வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக அந்த சுடுகாட்டிற்கு அடிப்படை வசதி இல்லாததோடு, கருமாதி மண்டபம் இல்லாததால் அப்பகுதியில் யாராவது உயிரிழந்தால் சாலையோரத்தில் 16 நாள் காரியம் செய்ய வேண்டிய அவல நிலை ஏற்பட்டு வந்தது.
அதனையடுத்து அப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியதை அடுத்து கிட்டப்பா பாலம் அருகே கருமாதி மண்டபம் கட்டுமான பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. ஆனால், நகராட்சி இடத்தை ஒரு சிலர் ஆக்கிரமிப்பு செய்திருப்பதால் கருமாதிமண்டபம் கட்டுமான பணி தொடக்கத்திலேயே நிறுத்தப்பட்டது. இந்நிலையில் பாதியில் நிறுத்தபட்ட இந்த பணியை மீண்டும் தொடங்க கோரி மாப்படுகை ஊராட்சி மற்றும் நகராட்சி 1 வது வார்டு பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் இணைந்து கடந்த மாதம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தை ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பேரிகாடுகள் இழுத்து தள்ளப்பட்டது.
TNEB: இனி ஏசி, வாட்டர் ஹீட்டர் பயன்படுத்தினால் கூடுதல் கட்டணம்? என்ன சொல்கிறது மின்சார வாரியம்?
அதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள் கட்டுமான பணி உடனே தொடங்கும் என்று உறுதி அளித்தனர். ஆனால், இதுநாள் வரையில் அப்பகுதியில் எந்த ஒரு பணியும் தொடங்காததால் ஆத்திரமடைந்த மாப்படுகை ஊராட்சி மக்கள் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அனைத்து வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாப்படுகை ரயில்வே கேட் அருகே கையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Income Tax Raid: தொடரும் வரிமான வரித்துறை ரெய்டு.. சிக்கிய பிரபல ஜவுளிக்கடை... 60 இடங்களில் சோதனை..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்