Crime : காதலியின் திருமணத்திற்கு முன்னாள் காதலன் கொடுத்த பரிசால் 2 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரியங்கா (23). இவர் அதே பகுதியில் உள்ள கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது சார்ஜு (24) என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர், இருவரும் காதலித்து வந்துள்ளனர். கல்லூரி படிப்பை முடித்து இருவரும் வேலைக்கு சென்றனர். ஒரு கட்டத்தில் பிரியங்கா வீட்டில் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.


பிரியங்கா தனது காதல் பற்றி வீட்டில் தெரிவிக்கையில், வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலும், குறைவான சம்பளம் வாங்குவதாகவும் கூறி சார்ஜுவை திருமணத்தை செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். 


வேறொரு நபருடன் திருமணம்


பிரியங்காவின் விருப்பம் இல்லாமல் வேறொரு நபருடன் திருமணம் செய்ய அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்தனர். அப்போது அமெரிக்காவில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஹேமந்த்ரா மேராவி (28) என்பவருடன் பிரியங்காவுக்கு திருமணம் நிச்சயமானது. 


முதலில் ஹேமந்த்ராவை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்த பிரியங்கா, நாளடைவில் வீட்டின் கட்டாயத்தால் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.  இதனை அறிந்த சார்ஜு கடும் மனஉளைச்சலுக்கு ஆளானார்.  இந்த நிலையில், கடந்த 1ஆம் தேதி ஹேமந்த்ராவுக்கும், பிரியாக்காவுக்கும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. அப்போது அந்த திருமணத்திற்கு விருந்தாளியாக பிரியங்காவின் முன்னாள் காதலன் சார்ஜு வந்துள்ளார். பின்னர்,  மேடைக்கு சென்று பிரியங்காவுக்கு ஹோம் தியேட்டர் ஒன்றை பரிசாக கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். 


பயங்கரம்


இதனை அடுத்து, திருமணம் முடிந்து பிறகு தங்களுக்கு வந்த பரிசுகளை பிரியங்காவும், ஹேமந்த்ராவும் பிரித்து பார்த்துள்ளனர். அப்போது பிரியங்காவின் முன்னாள் காதலன் சார்ஜு கொடுத்து ஹோம் தியேட்டரை வீட்டில் உள்ள ப்ளக் பாயிண்ட்டில் பொறுத்தியுள்ளார். பொறுத்திய அடுத்த நொடியில் பயங்கர சத்தத்துடன் ஹோம் தியேட்டர் வெடித்து சிதறியது. இதில் ஹேமந்த்ராவும், அவரது அண்ணன் ராஜ்குமாரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். மேலும் புதுப்பெண் பிரியங்கா உள்ளிட்ட 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இதனை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த 2 பேரின் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், பரிசு கொடுத்த பிரியங்காவின் முன்னாள் காதலன் சார்ஜுடம் விசாரித்தனர்.


அப்போது, ஹோம் தியேட்டரில்  சுமார் 2 கிலோ எடையுள்ள அம்மோனியம் நைட்ரேட்டை வைத்துள்ளார். தன்னை காதலித்து வேறொரு நபருடன் பிரியங்கா திருமணம் செய்தது பிடிக்காமல், அவருக்கு பரிசளித்த பொருளில் வெடிகுண்டை வைத்ததாக சார்ஜு வாக்குமூலம் அளித்தார்.  பின்னர், சார்ஜுவை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் படிக்க


IIT Madras: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மின்னணு செய்முறைப் பெட்டகங்கள் வழங்குகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.. விவரம்..