Crime : டாட்டூ போட சொல்லி குழந்தைகளை கட்டி வைத்து சித்ரவதை செய்த தம்பதியினரை போலீசார் கைது செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


டாட்டூ மோகம்


அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வருபவர்கள் மேகன் மே ஃபர் (27). இவரது மனைவி கன்னர் ஃபர் (23). இந்த தம்பதிக்கு 9 மற்றும் 5 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். தம்பதிகள் டாட்டூ போட்டுக் கொள்ளும் ஆர்வம் உடையவர்கள் என்று தெரிகிறது.  இதனால் தங்கள் குழந்தைகளுக்கும் டாட்டூ போட முடிவு செய்தனர்.


இதனால் பலமுறை தங்கள் குழந்தைகளிடம் இதுபற்றி கூறியுள்ளனர். ஆனால் இதற்கு அந்த குழந்தைகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கடும் கோபமடைந்த அந்த தம்பதியினர், அந்த இரண்டு குழந்தைகளை கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. 


குழந்தைகள் சித்ரவதை


ஒரு கட்டத்தில் குழந்தைகளை சித்ரவதை செய்யத் தொடங்கினர். அதாவது டாட்டூ போட சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, இரண்டு குழந்தைகளின் வாயை கட்டிவைத்து, வாயை டேப்பால் அடைத்து, கண்களை துணியால் கட்டிப் போட்டு டாட்டூ போட்டுள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு குழந்தைகளில் கை மற்றும் கால் பகுதியில் பெற்றோர்கள் டாட்டூ போட்டுள்ளனர்.


இதனை அடுத்து, குழந்தைகள் டாட்டூ போட்டுள்ளதை அதிகாரிகள் பார்த்துள்ளார். இதுபற்றி அவர்களிடம் விசாரணை  நடத்தினர். அப்போது இந்த சித்ரவதை குறித்து தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.


கைது


மேலும், இது பற்றி பெற்றோர்கள் அறிந்ததை அடுத்து, குழந்தைகளுக்கு பச்சை குத்திய இடத்தில் கத்தியால் வெட்டினர். பச்சை குத்திய இடத்தில் இருக்கும் சதையை அகற்றினர். இதனை அடுத்து, டாட்டூ போட்டுக் கொண்டது தெரியாமல் இருக்க எலும்பிச்சை சாற்றை வைத்து தேய்த்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இரண்டு குழந்தைகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.


இது பற்றி தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் தம்பதியினரை கைது செய்துள்ளர். இதனை அடுத்து, இரண்டு குழந்தைகளை மீட்டு போலீசார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 


இதுகுறித்து அதிகாரி கூறுகையில், ”டாட்டு இருந்த இடத்தில் காயங்களை கண்டோம். கத்தியை பயன்படுத்தி சுரண்டப்பட்டதற்கான தடயங்கள் இருந்தது. இதனால் தம்பதியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்" என்று தெரிவித்தனர். டாட்டூ போட சொல்லி பெற்ற குழந்தைகளை பெற்றோர்கள் சித்ரவதை செய்த சம்பவம் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் படிக்க


Amazon Layoff : பணிநீக்கத்தை மீண்டும் கையில் எடுத்த அமேசான்... மேலும் 9 ஆயிரம் பேருக்கு ஆப்பு...!


Watch Video: பைக் டாக்ஸியில் பாலியல் தொல்லை... பதறியடித்து வண்டியிலிருந்து குதித்த பெண்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!