Crime : பழனியில் பரபரப்பு.... இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை

பழனி பேருந்து நிலையம் அருகில் முன் விரோதம் காரணமாக இளைஞர் ஒருவரை வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Continues below advertisement

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் குரும்பப்பட்டியை சேர்ந்தவர் கோபால். இவருடைய மகன் வடிவேல் (27). நேற்று மதியம் இவர் பழனி  பேருந்து நிலையம் அருகே சாலையோரம் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென வடிவேலுவை சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்கள், தாங்கள் வைத்திருந்த அரிவாளால் வடிவேலுவை வெட்டினர். இதனால் அதிர்ச்சி அடைந்த வடிவேல், அவர்களிடம் இருந்து தப்பி உயிர் பிழைக்க ஓடினார். இருப்பினும் அவர்கள் அவரை ஓட, ஓட விரட்டி சென்று வெட்டினர்.இதில் வடிவேலுவின் கால், தலை, முதுகில் சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது.

Continues below advertisement

12-hour Work Bill: 12 மணிநேர வேலை மசோதா அதிகாரப்பூர்வ வாபஸ்..

இதில் நிலைகுலைந்து போன வடிவேல், கீழே சரிந்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். பழனி பேருந்து நிலையம் அருகே பட்டப்பகலில், கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த கொலை சம்பவம் அரங்கேறியது. ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதற்கிடையே கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த பழனி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

Murasoli: திமுக கூட்டணி கட்சியான சி.பி.எம். குறித்து முரசொலி விமர்சனம் - டி.கே.ரங்கராஜன் கருத்துக்கு எதிர்ப்பு!


‘பாஜகவின் அடிமையாக செயல்படுகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி’ திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் பதிலடி..!

மேலும், வடிவேலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கொலை செய்யப்பட்ட வடிவேல் மீது கொலை முயற்சி, அடிதடி என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் கொலை நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். பழனி பேருந்து நிலையம் அருகே பட்டப்பகலில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola