Crime: உடற்பயிற்சிக்காக ஜிம்முக்கு சென்ற இளைஞர் ஒருவர் எதிர்பாராத விதமாக அங்கு பரிதாபமாக உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியைச் சேர்ந்தவ்ர் சாஷம் ப்ருதி (24). இவர் ரோஹின் செக்டர் என்ற பகுதியில் வசித்து வந்துள்ளார். இவர் குருகிராமத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் உடற்பயிற்சியில் மிகவும் ஆர்வம் கொண்ட இவர், நாள்தோறும் ரோஹினி செக்டர் என்ற பகுதியில் உள்ள ஒரு ஜிம்மிற்கு வழக்கமாக பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில், வழக்கம்போல நேற்று முன்தினம் காலையில் ஜிம்முக்கு பயிற்சி மேற்கொள்ள சென்றிருக்கிறார். அப்போது அங்கிருந்த ட்ரெட்மில்லில் (Treadmill) அவர் ஓடிக்கொண்டிருந்தபோது, திடீரென சரிந்து விழுந்துள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர், இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், சாஷம் ட்ரெட்மில்லில் (Treadmill) ஓடிக்கொண்டிருக்கும்போதே அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளதாக தெரிவித்தனர். இது சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜிம்மின் மேலாளர் அனுபவ் க்கல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 287 இயந்திரங்களை சரி செய்வதில் அலட்சியம், 304 ஏ அலட்சியதால் உயிரிழப்புக்கு காரணமாக இருத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
போலீசார் கூறுகையில், ”சிசிடிவி காட்சிகளை சரிபார்த்தபோது, சாஷம் உடற்பயிற்சி செய்வது தெரிந்தது. டிரெட்மில்லில் ஓடிக் கொண்டிருந்த அவர் மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு தடய அறிவியல் ஆய்வகக் குழு சென்று ஆய்வு நடத்தியது. அங்கு அருகில் இருந்த வயர் ஒன்று ட்ரெட்மில்லில் இருந்துள்ளது. இதனை ஜிம் ஊழியர்கள் கவனிக்காமல் இருந்துள்ளனர்" என்று தெரிவித்தனர். நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ஜிம்மில் பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில், அவர்கள் மத்தியில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க