Crime : சென்னையில் 17 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த இளைஞர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சென்னை :  திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட மோவூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி. இவரது தந்தை, தாய் இறந்து விட்ட னர். அந்த சிறுமி கடந்த செப்டம்பர் மாதம் 23-ஆம் தேதி அங்குள்ள காட்டுப் பகுதியில் மாடுமேய்க்க சென்றார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த 5 இளைஞர்கள் சிறுமியை மறித்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்பு அவரை மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


அன்று நடந்த அந்த சம்பவத்தை தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோவை வைத்து சிறுமியை நீண்ட நாட்களாக மிரட்டி, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தங்களது விருப்பத்திற்கேற்ப நடந்த கொள்ள வேண்டும் என்று சிறுமியை வற்புறுத்தி வந்துள்ளனர். இதற்கு சிறுமி மறுத்ததால் உன் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அசிங்கப் படுத்தி விடுவோம் என்று இளைஞர்கள் 5 பேர் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது


இந்தநிலையில் அந்த சிறுமி மன உளைச்சலுக்கு ஆளாகினார். வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 24-ஆம் தேதி காலை தனது வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடனே இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் சிறுமையை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 


மேலும், இந்த சம்பவம் தொடர்பாக திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுமியிடம் வாக்குமூலம் பெற்று விசாரணை மேற்கொடுள்ளனர். இதையடுத்து கடந்த 40 நாட்களுக்கு பின் இவ்வழக்கில் அதே பகுதியை சேர்ந்த 5 இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதனிடையே சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய சிறுமி, ஒரு வீடியோவில் உருக்கமாக பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது "தாய், தந்தை இல்லாததால் வாழ்வாதாரத்திற்கு வழியில்லாமல் தவிக்கிறேன். தன்னிடம் தவறாக நடந்துகொண்டவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுத்ததற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாவட்ட காவல் எஸ்பி ஆகியோருக்கு அந்த சிறுமி நன்றி. பெற்றோர் இல்லாமல் மிகவும் வறுமை உள்ளேன். எனவே, தனக்கு உதவி செய்ய முதல்வரை சந்திக்கவேண்டும்" என்று சிறுமி வீடியோ வெளியிட்டுள்ளார்.




மேலும் படிக்க


TN Rain Alert: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழை - எந்தெந்த மாவட்டம் ? முழு விவரம்..


Tiruvannamalai Karthigai Deepam: இரண்டு ஆண்டுகளுக்கு பின் திருவண்ணாமலையில் மாட வீதியில் தேரோட்டம்.. உற்சாகத்தில் பக்தர்கள்..