நாள்: 02.12.2022


நல்ல நேரம்:


காலை 9.15 மணி முதல் காலை 10.15 மணி வரை


மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை






 

மதியம் 12.15 மணி முதல் மதியம் 1.15 மணி வரை

 

மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை




இராகு:


காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை


குளிகை:


காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை


எமகண்டம்:


பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை


சூலம் - மேற்கு


மேஷம்


வியாபார பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சொந்த ஊர் செல்வது தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். பங்காளிகளிடத்தில் பொறுமையுடன் செயல்படவும். உடல் ஆரோக்கியம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்களின் மூலம் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் குறையும் நாள்.


ரிஷபம்


தனவரவில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். செய்கின்ற முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வாகனம் தொடர்பான பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில் சார்ந்த முயற்சிகளில் சாதகமான வாய்ப்புகள் அமையும். அன்பு நிறைந்த நாள்.


மிதுனம்


வியாபாரம் ரீதியான பயணங்களில் சாதகமான சூழல் அமையும். மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வுடன் செயல்படவும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார பணிகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். பத்திரம் சார்ந்த பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மதிப்பு மேம்படும் நாள்.


கடகம்


உத்தியோகத்தில் நிர்வாக திறமை வெளிப்படும். நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கடினமான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். காணாமற்போன முக்கிய ஆவணங்கள் மீண்டும் கிடைக்கும். வர்த்தகம் சார்ந்த வியாபாரத்தில் உள்ள சில சூட்சுமங்களை கற்று கொள்வீர்கள். மறதி குறையும் நாள்.


சிம்மம்


நண்பர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். வாழ்க்கை துணையுடன் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் தன்மையை அறிந்து செயல்படவும். வர்த்தகம் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து முடிவு எடுக்கவும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். ஊக்கம் வேண்டிய நாள்.


கன்னி


பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் திருப்திகரமான சூழல் அமையும். கவிதை மற்றும் இலக்கியம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவீர்கள். வெளிவட்டாரங்களில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள்.


துலாம்


இழுபறியாக இருந்துவந்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். கடந்த கால நினைவுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம் உண்டாகும். புதிய வீடு, மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். நெருக்கமானவர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபாரம் ரீதியாக எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும். அமைதி நிறைந்த நாள்.


விருச்சிகம்


சகோதரர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். வித்தியாசமான புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். அரசு தொடர்பான காரியங்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். சுபகாரிய முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான வாய்ப்புகள் அமையும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.


தனுசு


பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். சகோதரர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். மாணவர்கள் தங்களின் திறமைகளை அறிந்து கொள்வீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.


மகரம்


உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் மேம்படும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். காது தொடர்பான இன்னல்கள் அகலும். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றம் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.


கும்பம்


வாக்கு சாதுர்யத்தின் மூலம் தடைபட்ட சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். வியாபார பணிகளில் ஏற்பட்ட சிறு சிறு மாற்றங்களின் மூலம் லாபம் மேம்படும். நண்பர்களின் வழியில் உதவி கிடைக்கும். துரித உணவு உண்பதை தவிர்ப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். மனதிலிருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். செல்வாக்கு மேம்படும் நாள்.


மீனம்


புதிய பயணங்களின் மூலம் மனதில் தெளிவு பிறக்கும். மூத்த உடன்பிறப்புகள் சாதகமாக செயல்படுவார்கள். உணர்ச்சிவசமின்றி பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாராத இடத்திலிருந்து சில உதவிகள் கிடைக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். மனதில் ஒருவிதமான குழப்பமும், அமைதியின்மைக்கான சூழ்நிலையும் உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.