Crime : மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 16 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மாடியில் இருந்து 16 வயது சிறுமி குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. 

அப்போது, போலீசார் சிறுமியின் சகோதரியிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், சிறுமிக்கு பழக்கமான இளைஞர் ஒருவர் சம்பவத்தன்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சிறுமியானது சம்பவத்தன்று மாலை, அவரது சகோதரி மற்றும் தோழியுடன் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது இவர்களை வழிமறித்து அந்த இளைஞர் தன்னிடம் பேசுமாறு சிறுமியை வற்புறுத்தி வந்துள்ளார்.

இதனை தட்டிக்கேட்ட சிறுமியின் சகோதரி மற்றும் நண்பர்களை அந்த இளைஞர் கடுமையாக தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர், அந்த நபர் தன்னுடன் பேசவில்லை என்றால் அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டியுள்ளதாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த 16 வயது சிறுமி சம்பவத்தன்று இரவு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர், அவர் குடியிருப்பின் மாடியில் இருந்து 16 வயது சிறுமி குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் ஜாதவ் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இது பற்றி அவரிடம் போலீசார் விசாரணை மேற்டு வருகின்றனர். 

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,சென்னை - 600 028.தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)


மேலும் படிக்க

Andhra Pradesh Farmer: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனின் கான்வாயை மறித்த விவசாயிகள்… வைரலாகும் வீடியோ! என்ன காரணம்?

Watch Video: பைக் டாக்ஸியில் பாலியல் தொல்லை... பதறியடித்து வண்டியிலிருந்து குதித்த பெண்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!