பைக்கில் பயணம் செய்வதன் மீது நடிகர் அஜித் குமாருக்கு எப்போதும் தீவிர காதல் இருந்து வருகிறது. ஒரு படத்திற்கும் அடுத்த படத்திற்கும் இடையில் ஒரு சிறீய இடைவேளை கிடைத்தால் போதும் பைக்கை எடுத்து கிளம்பிவிடுவார் ஏகே. தற்போது ஏகே அஜித் தனது உலக சுற்றுப் பயணத்தின் இரண்டாம் கட்ட பயணத்தில் உள்ளார். உலகம் முழுவது பைக்கில் பயணம் செய்யப்போவதாக நடிகர் அஜித் முடிவு செய்து அந்த திட்டத்தின்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்திய முழுவதிற்குமான முதல் கட்ட பயணத்தை நிறைவு செய்தார்.


தற்போது துணிவு  படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த பட வேலைகளை தொடங்குவதற்கு முன் தனது இரண்டாம் கட்ட பயணத்தை தொடர்ந்திருக்கிறார் அஜித். இந்த பயணத்தில் அவர் கார்கில் , லடாக், லே, ஜம்மு,ஷ்ரிநகர், மணாலி, ரிஷிகேஷ் மற்றும் ஹரித்வார் முதலிய ஊர்கள் வழியாக பயணிக்க உள்ளார்.தற்போது ரசிகர் ஒருவர் அவரை நேபாளில் அடையாளம் கண்டு அவருடன் வீடியோ வெளியிட்டது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.






இந்த வீடியோ வைரலாகியதற்கு முக்கிய காரணம் ஒன்று இருக்கிறது. வருடா வருடம் அஜித் குமாரின் அடுத்த படத்திற்கான அப்டேட்காக அவரது ரசிகர்களின் கஷ்டத்தை ஒரு அஜித் ரசிகரால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். துணிவு படத்தை அடுத்து அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக செய்தி வெளியானது.ஆனால் சில நாட்களிலேயே அந்த படம் கைவிடப்பட்டது. இதனால் மனம் சோர்ந்த அவரது ரசிகர்கள் இன்னும் கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டி இருந்தது. இதற்கடுத்து தடையர தாக்க படத்தை இயக்கிய மகிழ் திருமேனி அஜித் படத்தை இயக்குவதாக செய்தி வெளியானது. இது குறித்தும் உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.இப்படியான ஒரு சூழ்நிலையில்  இந்த மாதிரியான வெறும் ஒரு சில நொடிகளே வெளியாகும் வீடியோக்கள் அவரது அடுத்த படம் குறித்தான தகவல் வெளியாவது வரை அவரது ரசிகர்களுக்கு பெரும் ஆசுவாசம் அளிக்கும்


 நேபாளில் அஜித் சமைக்கும் வீடீயோ வைரலானதை அடுத்து மற்றொரு வீடியோ வைரலாகி வருகிறது. நடிகர் அஜித்தை அடையாளம் கண்டுகொண்ட அங்கிருக்கும் ரசிகர் ஒருவர் அவருடன் சேர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் நடிகர் அஜித்தை ’தென் இந்திய சூப்பர் ஸ்டார் அஜித் குமார் என குறிப்பிட்டு மிக மகிழ்ச்சியாக தனது உணர்வுகளை பகிர்ந்துகொள்கிறார்.


இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளி குதிக்கிறார்கள். மேலும் பல ரசிகர்கள் தாங்களும் கிளம்பி நேபாள் சென்றுவிடலாம் என்கிற அளவிற்கு  உற்சாகமடைகின்றனர். அடுத்த சில மாதங்களில் இந்த பயணத்தை முடித்து சென்னை திரும்பியதும் அஜித் குமாரின் அடுத்த படத்திற்கான தகவல் வெளியாகும் என அனைவராலும் எதிர்பார்க்கப் படுகிறது.