தாம்பரம் அருகே திருமணமான ஒரே மாதத்தில் நகை பணத்துடன் தப்பி ஓடிய புது மனப்பெண்ணை போலீசார் ஆதார் கார்டை கைப்பற்றி அதில் இருக்கும் விலாசத்திற்க்கு விரைந்துள்ளனர் .சென்னை தாம்பரம் அடுத்த ரங்கனாதபுரத்தை சேர்ந்தவர் நடராஜன் (25) ஊரப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
அப்போது அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த அபிநயா (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் அபிநயா பெற்றோரை தனது வீட்டிற்கு அழைத்து வருமாறு நடராஜன் கூறியுள்ளார். ஆனால் தனக்கு யாரும் இல்லை என்று கூறியதால் கடந்த ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி ரங்கனாதபுரம் பெருமாள் கோவிலில் நடராஜன் பெற்றோர் மற்றும் உறவினர் முன்னிலையில் திருமணம் செய்து வாழ்ந்து வந்தனர்.
இதனையடுத்து நேற்று அருகில் தூங்கி கொண்டிருந்த அபிநயா திடிரென காணமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்பு அறையில் இருந்த பீரோவை பார்த்த போது அதில் வைக்கபட்டிருந்த 17 சவரன் தங்க நகைகள் மற்றும் 20,000 ரொக்க பணத்துடன் அபிநயா மாயமானது தெரியவந்தது.
இது குறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டதை அடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் அபிநயாவின் ஆதார் கார்டை கைபற்றி அதில் இருக்கும் விலாசத்திற்க்கு போலீசார் வரைந்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்