புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கடைகள் உரிமையாளர்களிடம் மாமூல் கேட்டு பட்டா கத்தியுடன் ரவுடிகள் வலம் வரும் காட்சிகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன, இந்த நிலையில் புதுச்சேரி பேக்கரி ஒன்றில் தகராறு செய்து. அதன் உரிமையாளரிடம் மாமுல் கேட்ட பிரபல ரவுடி மற்றும் அவரது கூட்டாளி சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Indian National Congress: காங்கிரஸ் கழட்டி விட்டா கலக்கல்..நிரூபிக்கும் முன்னாள்கள்


 



புதுச்சேரி: பேக்கரியில் மாமூல் கேட்டு  தகராறு- பிரபல ரவுடி மற்றும் அவரது கூட்டாளி கைது


புதுச்சேரி தவளகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சண்முக சுந்தரம் இவர் மகாத்மா காந்தி வீதியில் பேக்கரி ஒன்று நடத்தி வருகிறார், இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே முத்தியால் பேட்டை சேர்ந்த பிரபல ரவுடி கார்த்திக் என்கிற  எலி கார்த்தி மாமூல் தர வேண்டும் என கதியை காட்டி மிரட்டி வந்த நிலையில் நேற்று மாலை உரிமையாளர் கடையில் இல்லாத போது தனது கூட்டாளி வானரபேட்டை பகுதியை சேர்ந்த மதி உடன் வந்த அவர் தனக்கு மாமூல் தரவில்லை என்றால் கடையை அடித்து நொருக்கி விடுவதாக கூறி கடையில் வேலை செய்து வரும் சிவா என்ற ஊழியரின் சட்டையை பிடித்து மிரட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.



PTR Palanivel Thiagarajan Comment: மாட்டு மூத்திரம் குடிப்பவங்களே! மாட்டுச் சாண மூளையா? கொந்தளித்த PTR


பட்டாக்கத்தி உடன் மாமுல் தரவில்லை என்ற காரணத்தினால் கொலை மிரட்டல் விடுத்தல் நபரின் காட்சிகள் இவை அனைத்தும் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியது இதனை தொடர்ந்து கடையின் உரிமையாளர் சண்முகசுந்தரம் பெரியகடை காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகளுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக புகாரினை அளித்தார். சண்முகசுந்தரம் அளித்த புகாரின் பேரில் போலீசார் எலி என்கின்ற கார்த்திக் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று இரண்டு பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.




மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் ரவுடி எலி கார்த்திக் மீது 4 கொலை வழக்கு, நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள காரணத்தால் குண்டர் சட்டம் பாய்வதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட ரவுடி எலி கார்த்திக் மற்றும் அவரது கூட்டாளிகளை காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.


 


Annamalai pressmeet : வளைகாப்புதான் முக்கியமா? பிடிஆருக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி