மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த நத்தம் கிராமத்தில்  தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரி மாணவர்கள் நேற்று மாலை வகுப்புகள் முடிந்து பேருந்தில் செல்வதற்காக சட்டநாதபுரம் கிராமத்தில் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர். அப்போது கல்லூரி மாணவர்கள் இருதரப்பினரும்  இடையே மோதல் ஏற்பட்டுள்ளது‌. இதனையடுத்து இரு பிரிவு மாணவர்களுக்கு ஆதரவாக வெளி நபர்களும் மோதலில் ஈடுபட்டனர். 




Anbumani Ramadoss: பாமக தலைவராக அன்புமணி ராமதாஸுக்கு முடிசூட்டப்பட்டது.. திருவேற்காடு பொதுக்குழுவில் ஒரு மனதாக தேர்வு..


இதனால், அப்பகுதி பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. கல்லூரி மாணவர்கள் மோதலை கண்டு ஆத்திரமடைந்த உள்ளூர்வாசிகள் அதனை தட்டிக் கேட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அப்பகுதி பொதுமக்கள் மாணவர்கள் மோதல் குறித்து சீர்காழி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து  சீர்காழி காவல்துறையினர் மாணவர்களுக்கு இடையேயான மோதலை தடுத்து நிறுத்தினர். காவல்துறையினரை கண்ட மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் நான்கு புறமும் சிதறி ஓட்டம் பிடித்தனர்.




மெஷினில் குழந்தைகளையும், மனைவியையும் அறுத்த கொன்ற நபர், தானும் தற்கொலை.. பொழிச்சலூரில் பயங்கரம்..


தொடர்ந்து அவர்களை விரட்டி பிடித்த காவல்துறையினர், மோதலில் ஈடுபட்ட  மாணவர்கள் உள்பட 12 பேரை பிடித்து சென்று சீர்காழி காவல்நிலையத்தில்   விசாரணை மேற்கொண்டுள்ளனர். மக்கள் நடமாட்டம் அதிகம் மிகுந்த பேருந்து நிறுத்தத்தில் தனியார் கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவத்தால் சட்டநாதபுரம், கைக்காட்டி பகுதியில் பரபரப்பாக சூழ்நிலை நிலவியது.




Sleeping Pills : அடிக்கடி தூக்க மாத்திரை எடுத்துக்கொள்கிறீர்களா? : இதை முதல்ல நீங்க படிச்சே ஆகணும்..


இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கடந்த சில மாதங்களாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மாணவர்கள் மோதிக்கொள்ளும் சம்பவங்கள் தமிழ்நாட்டில் பல இடங்களில் அரங்கேறி வருவதாகவும், இதனை தமிழ்நாடு அரசு கருத்தில் கொண்டு, மூர்க்கத்தனமாக செயல்படும் மாணவர்களே பள்ளியில் பயிலும் போதே ஆரம்ப நிலையில் கண்டறிந்து, அவர்களுக்கென தனி உளவியல் ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்ய தவறும் பட்சத்தில் வருங்காலங்களில் இளைய தலைமுறையினர் மாணவச் செல்வங்கள் அதிக அளவில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு பெரும் சமூக சீர்கேடு ஏற்படும் நிலைமைக்கு தமிழகம் தள்ளப்பட்டு விடும் என்றும், மேலும் அனைத்து வீடுகளில் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளே பெற்றோர்கள் கண்காணித்து அவர்களிடம் மாற்றம் தென்பட்டால் அது குறித்து அவரிடம் பேசி அவர்களை நல்வழிப்படுத்த பெற்றோர்களின் முற்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.