பொழிச்சலூரில் மனைவி இரு பிள்ளைகளை மரம் அறுக்கும் கருவியால் அறுத்து கொலை செய்த தந்தை தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்


சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொழிச்சலூர் பகுதியில் பிரகாஷ்(41) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் ஐடி நிறுவன ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருடன் அவரது மனைவி காயத்திரி (39), மகள் நித்யஸ்ரீ(13), மகன் ஹரி கிருஷ்ணன் (8)ஆகியோர் வசித்து வந்துள்ளனர். 


இந்நிலையில் பிரகாஷ் தன்னுடைய மனைவி மற்றும் 2 குழந்தைகளை மரம் அறுக்கும் ரம்பத்தால் கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் பிரகாஷ் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக சங்கர் நகர் போலீசார் நிகழ்விடத்திற்கு வந்துள்ளனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். கொலைக்கான காரணம் தொடர்பாகவும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.




எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண