இஸ்லாமாபாத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிய பாகிஸ்தான் பிரதமரின் முன்னாள் மனைவி, இது இம்ரான் கானின் புதிய பாகிஸ்தானா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், எப்ஐஆர் பதிவு செய்ய அவரும் அவரது ஊழியர்களும் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது என்றும் புகார் கூறினார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரெஹாம் கான், இஸ்லாமாபாத்தில் நேற்று இரவு திருமணத்திற்குச் சென்று திரும்பியபோது தனது வாகனம் துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மருமகனின் திருமணத்திலிருந்து வீடு திரும்பும் வழியில், அவரது கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், பைக்கில் வந்த இருவர் துப்பாக்கி முனையில் வாகனத்தை வைத்திருந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், தனது முன்னாள் கணவரையும் குறிவைத்து, இம்ரான் கானின் ஆட்சியின் கீழ் பாகிஸ்தான் "கோழைகள், குண்டர்கள் மற்றும் பேராசைக்காரர்களின்" நாடாக மாறிவிட்டது என்றும் கூறினார்.
இந்த தாக்குதலுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறிய அவர், எப்ஐஆர் பதிவு செய்ய அவரும் அவரது ஊழியர்களும் பல மணிநேரம் காத்திருக்க வேண்டியிருந்தது என்றும் புகார் கூறினார்.
2014 முதல் 2015 வரை இம்ரான் கானுடன் வாழ்ந்து வந்த ரெஹாம் கான், பாகிஸ்தான் பிரதமரை கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ரெஹ்மா, பிரிட்டிஷ்-பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஆவார். இம்ரான் கானை 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இஸ்லாமாபாத்தில் திருமணம் செய்து கொண்டார். ஆனால், அந்த ஆண்டு அக்டோபரில் இருவரும் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்த 10 மாதங்களில் திருமணம் முடிவுக்கு வந்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்