’உன் முகத்துல பருக்கள் இருக்கு.. புது வீடு கொடுத்தா வாழுவேன்..’ : நிர்வாண படத்தை வைத்து மிரட்டிய கணவன் கைது.. என்ன நடந்தது?
மனைவியிடம் வரதட்சணை கேட்டு கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியுள்ளனர்.

திருமணங்களில் எப்போதும் வரதட்சணை கொடுமை மிகப்பெரிய பிரச்னையாக அமைந்துள்ளது. அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு வரதட்சணை கொடுமை சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் மீண்டும் பெண் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிச்சைமுத்து(32). இவருக்கும் 27 வயது மதிக்கதக்க இளம்பெண் ஒருவருக்கும் 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த இளம்பெண் தனியார் வங்கி ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகிறார். பிச்சை முத்து ஒரு கணினி மென்பொருள் நிறுவனத்தின் பணியாற்றி வருகிறார். அந்தத் திருமணத்தின் போது இவருக்கு வரதட்சணையாக 51 சவரன் நகை மற்றும் 5 லட்சம் ரூபாய் ஆகியவை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Just In




மேலும் படிக்க:மனைவிக்கு கொலை மிரட்டல்: இளைஞரை கொலை செய்த காய்கறி வியாபாரி!
எனினும் திருமணத்திற்கு பிறகு பிச்சைமுத்து மற்றும் அவருடைய மனைவிக்கும் சண்டை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அப்போது மனைவியின் முகத்தில் பருக்கள் இருப்பதால் அவருடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என்று பிச்சைமுத்து கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தை அப்பெண் கணவரின் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு கணவரின் குடும்பத்தினர் மீண்டும் வரதட்சணையாக வீடு ஒன்றை வாங்கி வருமாறு கூறியுள்ளதாக தெரிகிறது. அத்துடன் தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்றால் வீடு வாங்கியே வரவேண்டும் என்று தொடர்ந்து கணவர் பிச்சைமுத்து கூறி வந்துள்ளதாக தெரிகிறது.
இந்த பிரச்னை தொடர்பாக பிச்சைமுத்து மற்றும் அவரின் குடும்பத்தினர் அந்தப் பெண்ணை கொடுமை படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அப்பெண்ணின் நிர்வாண படங்களை எடுத்து மிரட்டியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்தப் பெண் தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அப்பெண் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் பிச்சைமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வரதட்சணை கேட்டு இளம் பெண்ணை கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மிரட்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் கணவரின் குடும்பத்தினரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க:திருமணத்தை மீறிய உறவு! கணவனுக்கு காப்பு மாட்ட கஞ்சா செடி ப்ளான்! பெண் கவுன்சிலர் கைது!