சென்னை வடபழனியை அடுத்து அமைந்துள்ளது வளசரவாக்கம். இந்த பகுதியில் உள்ள ஆற்காடு சாலையில் வசித்து வந்தவர் குமரேசன். அவருக்கு வயது 78. இவர் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர். இந்த நிலையில், இவர் திடீரென மாயமாகியதாக இவரது மகள் அளித்த புகாரின் பேரில் குமரேசனை தேடியபோது அவரது சொந்த மகனே அவரை துண்டு, துண்டாக வெட்டிக்கொலை செய்து புதைத்தது விசாரணையில் தெரியவந்தது.


இதையடுத்து, தந்தையை கொலை செய்த மகன் குணசேகரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில், பூந்தமல்லி நீதிமன்றத்தில் குணசேகரன் சரண் அடைந்தார். அவர் மொட்டை அடித்து காணப்பட்டார். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் தந்தை கொலை செய்து புதைத்தபிறகு போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக மொட்டை அடித்து தலைமறைவாக திரிந்து வந்தார் என்று தெரியவந்துள்ளது.




இதையடுத்து, நீதிமன்றத்தில் சரணடைந்த குணசேகரனை போலீசார் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர். போலீசாரின் விசாரணைக்கு பிறகே கொலைக்கான முழு காரணமும் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, கடந்த இரண்டு, மூன்று வாரங்களுக்கு முன்னதாக குமரேசன் மாயமாகியபோது அவரை அவரது மகள் காஞ்சனமாலாவுடன் சேர்ந்து தேடுவது போல நடித்த குணசேகரனும் திடீரென மாயமானார். இதையடுத்து, வீட்டின் உள்ளே நன்றாக தேடிப்பார்த்த காஞ்சனமாலா வீட்டின் உள்ளே ரத்தக்கறை படிந்திருப்பதை கண்டார்.


இதையடுத்து, காஞ்சனா மாலா அளித்த புகாரின்பேரில் விசாரணையைத் தொடங்கிய போலீசார் குணசேகரன் வீட்டின் உள்ளே இருந்து ஒரு பேரலை எடுத்துக்கொண்டு சென்று ராணிப்பேட்டை மாவட்டத்திற்குட்பட்ட காவேரிப்பாக்கத்தில் உள்ள காலிமனையில் புதைத்தது தெரியவந்தது. குணசேகரன் புதைத்த இடத்தில் இருந்த பேரலை தோண்டி எடுத்த போலீசார் அதில் குமரேசன் சடலமாக, அதுவும் துண்டு, துண்டாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.




சி.சி.டி.வி. காட்சிகளை அடிப்படையாக கொண்டு குமரேசனை குணசேகரன்தான் கொலை செய்திருப்பார் என்பதை உறுதி செய்த போலீசார் அவரை தேடுவதற்காக உதவி ஆணையர் கலியன், காவல் ஆய்வாளர் குரூஸ் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகளை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில், குணசேகரன் தானே வந்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். 


இதையும் படிங்க: Two Thousand Rupee : 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுகிறதா ரிசர்வ் வங்கி? என்ன காரணம்? அறிக்கை சொல்வது என்ன?



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண