காத்து வாக்குல இரண்டு காதல் திரைப்படம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா நடிப்பில் இருதரப்பு விமர்சனங்களையும் பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் அண்மையில் சாய் வித் சித்ரா நிகழ்வில் தான் திரைத்துறைக்கு வந்த அனுபவம் மற்றும் திரையுலகத்தினர் உடனான தனது நட்பு குறித்து பகிர்ந்துகொண்டார்.. 

Continues below advertisement

 

Continues below advertisement

அதில், “நான் எனது முதல் படத்துக்கான கதை சொன்னபோது எனக்கு 25 வயது.போடா போடிதான் எனது முதல் படம். அதை எடுத்து முடிக்க 4 வருஷம் ஆச்சு. எனக்கு திரைப்படத்துறையில் வருவதற்கும் பின்னர் நிலையா நிற்பதற்கும் நிறையவே பொறுமை தேவைப்பட்டது. சின்ன வயசுல நிறைய ப்ரோமோ வீடியோக்கள் எடுத்துட்டு இருந்தேன். எனக்கு ஸ்கூல் சீனியரா இருந்தவர் சிம்பு சார். அவர் கூட என்னோட முதல் படத்துக்காகப் பயணிச்ச அனுபவம் நிறைய பாடத்தைக் கத்துக்கொடுத்துச்சு. அவர் எல்லாத்துலையும் திறமையானவர்.

இன்ஃபாக்ட் நான் பாட்டு எழுதக் கத்துக்கிட்டதுக்கும் அவர் இன்ஸ்பிரேஷனா இருந்துக்காரு. ஆனா படம் வெளியானது சரியா போகலை. யாரும் அடுத்து பட வாய்ப்பு தரலை. அதனால் இரண்டு வருஷம் மீண்டும் முதல்லேர்ந்து தொடங்கி வொர்க் செஞ்சேன். மீண்டும் என்னை உருவாக்கிக்கிட்டேன்.  அப்பா நான் 12-வது படிக்கும்போதே இறந்துட்டாரு. அம்மாதான் எனக்கு முழுவதும் சப்போர்ட்.

அப்பா இறந்ததை காரணமாகச் சொல்லி என்னை வேலைக்குப் போகச்சொல்லி அவங்க கட்டாயப்படுத்தி இருக்கலாம். ஆனால் அப்படி செய்யலை. எனக்கு முழு ஆதரவா இருந்தாங்க" என்றார்.  

விரைவில் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் திருமணம் நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. தேவையில்லாமல் நயன்தாராவையும், அவரது கடந்த கால காதல் முறிவையும் ட்ரோல் செய்பவர்களுக்கு குட்டு வைத்திருக்கிறார் விக்னேஷ் சிவன்