தாங்கள் முதலிடு செய்த 100.67 கோடி ரூபாயை இந்தியன் வங்கி உடனடியாக திருப்பி செலுத்த வேண்டும் என்று சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகம் 100 கோடி ரூபாயை சென்னையில் உள்ள இந்தியன் வங்கி கோயம்பேடு கிளையில் முதலீடு செய்தது. கடந்தாண்டு மாா்ச் மாதம், கோயம்பேடு வங்கி கிளைக்கு வருகை புரிந்த மோசடி நபர் ஒருவர், தன்னை சென்னை துறைமுக பொறுப்புக் கழகத்தின் நிதிப் பிரிவு துணை இயக்குநா் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். தனது அடையாளத்தை நிறுவுவதற்கான, போலி ஆவணங்களையும் வங்கியுடம் காட்டியுள்ளார்.
Africa | நோயாளிகள்போல் நடித்து 70 கோடி மதிப்புள்ள ஹெராயின் கடத்திய கும்பல் கைது
மேலும், துறைமுகம் முதலீடு செய்துள்ள ரூ.100 கோடியில், ரூ.45 கோடியை நடப்புக் கணக்குக்கு மாற்ற வேண்டும் என்றும், ரூ.50 கோடியை நிரந்தர வைப்புத் தொகையாக (Fixed Deposits) வைக்க வேண்டும் என வங்கியிடம் கேட்டிருக்கிறார்.
இதனையடுத்து, புதிதாக நடப்பு கணக்கு தொடங்கப்பட்டு ரூ.45 கோடியை உடனடியாக வங்கி அதிகாரிகள் மாற்றினர். ரூ.50 கோடியை நிரந்தர வைப்புத் தொகையாக வைத்திருந்தனர். நடப்புக் கணக்கில் மாற்றப்பட்ட ரூ. 45 அடுத்தடுத்த நாட்களில் வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து, துறைமுகப் பொறுப்புக் கழகம் இந்தியன் வங்கியிடம் தொடர்பு கொள்ள ஆரம்பித்தனர். பின்னர் தான், பெரும் தொகை மோசடி செய்யப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.
இந்த மோசடி தொடர்பாக, வங்கியின் துணை மேலாளர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து, இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
’லலிதா ஜீவல்லரி’ திருட்டு பாணியில் டாஸ்மாக் கடை சுவற்றில் துளையிட்டு கொள்ளை
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகிய துறைமுகப் பொறுப்புக்கழகம், " தாங்கள் முதலீடு செய்த ரூ. 100 கோடியை இந்தியன் வங்கி உடனடியாக திருப்பித் தர வேண்டும். வங்கியின் கவனக் குறைபாடு காரணமாகத்தான் இந்த மோசடி நடைபெற்றது. 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது பணத் தொகையைத் திருப்பி செலுத்துவதற்கும், விசாரணைக்கும் எந்த தொடர்பும் இல்லை" என்று தெரிவித்தது.
சொன்னது வெஜிடபுள்... இருந்ததோ கர்நாடகா ‛புல்’ ; லாரியோடு சிக்கிய மது ஏஜெண்டுகள்!
வங்கியின் தரப்பில் - மோசடியில் பங்களிப்பு / அலட்சியம் / செயல்பாட்டில் குறைபாடு (பரிவர்த்தனை வாடிக்கையாளரால் அறிவிக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல்) போன்ற நிகழ்வுகளில் வாடிக்கையாளர் பொறுப்பாகமாட்டார் என்று இந்திய ரிசர்வ் வங்கி ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதே சமயம், வாடிக்கையாளரின் அலட்சியத்தால் இழப்பு ஏற்பட்டால், அதாவது பரிவர்த்தனை சார்ந்த சான்றுகளை யாரிடமாவது பகிர்ந்து கொண்டிருந்தால், மோசடி பரிவர்த்தனைகளை வங்கியிடம் தெரிவிக்காத வரையில் வாடிக்கையாளர் முழுமையான இழப்பிற்கு பொறுப்பாகிறார்.