பிரபல நடிகரும், எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலினின் மனைவி தான் கிருத்திகா உதயநிதி என்பது அனைவரும் அறிந்ததே. கிருத்திகா 2013-ஆம் ஆண்டு வெளியான வணக்கம் சென்னை என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஒரு இயக்குநராக தனது கால்தடத்தை பதித்தார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் கீழ் கிருத்திகாவின் கணவர் உதயநிதியால் இந்த படம் தயாரித்து வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. கிருத்திகா எழுதி இயக்கிய இந்த படத்தில் பிரபல நடிகர் சிவா மற்றும் பிரியா ஆனந்த் நடித்திருந்தனர்.
1955-ஆம் ஆண்டு வெளியான மிஸ்ஸியம்மா என்ற படத்தின் தழுவல் தான் வணக்கம் சென்னை, திரைப்படம் என்று சில புரளிகள் வெளியான நிலையில் அப்போது அந்த தகவலை கிருத்திகா மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு சில ஆண்டு காலம் இயக்குநர் பணிக்கு ஓய்வு கொடுத்த கிருத்திகா 2018-ஆம் ஆண்டு தனது அடுத்த படத்தை இயக்கினார். பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான காளி படத்தை இயக்கினார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் முதலில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் தயாரிப்பாளர் நாயகன் விஜய் ஆண்டனியின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
காளி திரைப்படம் வியாபார ரீதியாக பெரிய அளவில் வெற்றிபெறவில்லை என்றபோதும் கதைக்களத்திற்காக சிறந்த பாராட்டுக்களை பெற்ற படம் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் ஆண்டனியும் தனது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தினர். அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத் மற்றும் அம்ரிதா ஐயர் ஆகிய நாயகிகள் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில் கிருத்திகா தனது அடுத்த படத்தை விரைவில் இயக்கவுள்ளார் என்ற தகவல் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வந்தது. ஆனால் இயக்குநர் கிருத்திகா தரப்பில் இருந்து இதுகுறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
Ilayaraja song | உறங்கும் வேளையில்... ராஜாவின் 5 இனிமையான பாடல்கள்!
இந்நிலையில் தற்போது கிருத்திகா இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் பிரபல நடிகர் காளிதாஸ் ஜெயராம் மற்றும் நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது. காளிதாஸ் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். கிருத்திகா இந்த படத்தை இயக்க, Rise East Entertainment நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க காளிதாஸ், மற்றும் தான்யா நடிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். படத்தை குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.