போலீஸே இப்படியா? ஃபுல் போதையில் தகராறு செய்த சென்னை காவலர்கள்! ரயிலில் நடந்த பரபரப்பு!

போதையில் பயணிகளிடம் தகராறு செய்த சென்னை போலீஸ் - ரயிலில் நடந்தது என்ன ?

Continues below advertisement

சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற முத்துநகர் விரைவு ரயிலில் மது போதையில் தகராறு செய்த காவலர்களை பயணிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் விருத்தாச்சலம் ரயில்வே போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தூத்துக்குடி வரை முத்துநகர் விரைவு ரயில் (Pearl City Express) இயக்கப்படுகிறது. வாரத்தின் ஏழு நாட்களும் இயக்கப்படும் இந்த ரயில் தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக உள்ளது. இதில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.

Continues below advertisement


ஜூன் 3-ம் தேதி வெள்ளிக்கிழமை சென்னையில் இருந்து சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட்ட முத்துநகர் விரைவு ரயில், 5 காவலர்கள் உட்பட 7 பேர் பயணித்துள்ளனர். இவர்கள் தாம்பரத்தில் இருந்து பிற பயணிகளிடம் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பயணிகள் டிக்கெட் பரிசோதகரிடம் புகார் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, டிக்கெட் பரிசோதகர் விருதாச்சலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் விருதாச்சலம் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் மூன்று போலீசார் உட்பட 5 பேரை கீழே இறக்கி விசாரணை நடத்தினர்.

 

அதில், அவர்கள் மாணிக்கராஜ், செந்தில்குமார், முருகன் என்பதும் இவர்கள் மூவரும் சென்னையில் காவலர்களாக பணியாற்றி வருவதும், குடிபோதையில் ரயிலில் பயணித்ததும் தெரியவந்தது. இதனால் அவர்களை கைது செய்த போலீசார் தப்பியோடிய 2 போலீசாரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட காவலர்களுக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய போலீசார் குடித்துவிட்டு தகராறு செய்த சம்பவம் காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

புதுச்சேரியில் புதிய மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி - கலால் துறை அறிவிப்பு


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

Continues below advertisement
Sponsored Links by Taboola