சென்னை அடுத்த சிறுச்சேரி பகுதியை சேர்ந்தவர் மஹாவீர் ஜெயின் (56). தொழிலதிபதிரான இவர் தற்போது தன் ஓய்வு காலத்தினை தன் குடும்பத்தோடும் கால்நடை விலங்குளை பராமரிக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார். சிறுச்சேரியில் இருக்கும் எல் அண்டு டி, ஈடன் பார்க் ஃபேஸ் 1 அடுக்கு மாடி குடியிருப்பில் குடும்பத்தோடு வசித்து வரும் மஹாவீர் ஜெயின் கொரோனா அலை தொடங்கிய முதலே கடந்த இரண்டு ஆண்டுகளாக அப்பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்களுக்கு உணவளித்து வருகிறார்.



 


 

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு அப்பகுதியில் சுற்றித் திரியும் தெருநாய்களுக்கு உணவளித்து விட்டு தன் நண்பருடன் வீட்டிற்கு செல்லும் வழியில் தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கக் கூடிய ராஜேஷ் தெரு நாய்களை கட்டையால் அடிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

 



 


 

இச்செயல் குறித்து ராஜேஷை மஹாவீர் ஜெயின் கண்டித்ததால் அவரை ஆபாசமாக திட்டிய ராஜேஷ், முதியவர் என்றும் பாராமல் நாயை அடித்த கட்டையினை கொண்டு மஹாவீர் ஜெயினையும் அதை தடுக்க முயன்ற அவருடைய நண்பரையும் பலமாக தாக்கியுள்ளான். இதனால் சம்பவ இடத்திலேயே அவர்கள் மயங்கி விழுந்துள்ளனர். இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.



இச்சம்பவத்தால் பலத்த காயமடைந்த மஹாவீர் ஜெயின் இச்சம்பவம் குறித்து தாழம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாயை தாக்கிய இளைஞரை தட்டிக்கேட்ட முதியவர் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது





 







 



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண