தமிழ் சினிமா இயக்குனரான கரு.பழனியப்பன், சமீப காலமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக 2013-ம் ஆண்டு ‘ஜன்னல் ஓரம்’ என்ற திரைப்படத்தை இயக்கியதற்கு பிறகு, இந்த ஆண்டு ஒரு படத்தை இயக்கு முடிவு செய்திருக்கிறார்.
கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இயக்கும் படத்திற்கு ‘ஆண்டவர்’ என பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்திற்கு இசையமைக்க யுவன்சங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும், பிரவீன் கே.எல் படத்தொகுப்பாளராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இப்படத்தை லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ், விசி ரவீந்திரன் தயாரிக்கிறது. மேலும் படத்தில் நடிக்க இருக்கும் முன்னணி நடிகர்கள் மற்றும் வேறு விவரங்களை படக்குழு விரைவில் வெளியிடும் என தெரிகிறது.
முன்னதாக, நடிகர் விஜயுடன் யுவன்சங்கர் ராஜா இருப்பது போன்ற புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலானது. விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதனையடுத்து தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘தோழா’ படத்தை இயக்கிய வம்சி படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை முடித்த கையோடு, விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கடுத்தபடியாக, விஜய் அட்லி படத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில்தான் யுவன், விஜயுடன் இணைந்து இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்தப் போட்டோ ஹைதாராபாத்தில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் ‘அந்த கண்ண பாத்தாக்கா’ என்ற பாடலை பாடியிருந்தார் யுவன். இந்நிலையில் விஜய் - யுவன் புகைப்படம் மூலம், மீண்டும் விஜயுடன் இணைய இருக்கிறாரா அல்லது பீஸ்ட் படத்தில் பாடியிருக்கிறாரா உள்ளிட்ட கேள்விகளை ரசிகர்கள் மத்தியில் எழுப்பியிருக்கிறது. ஒரு முறை இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர், விஜய்க்கு எப்போது இசைமைப்பீர்கள் என யுவனிடம் கேட்டார். அந்தக் கேள்விக்கு பதிலளித்த யுவன் ஷங்கர் ராஜா தான் எப்போதும் விஜயுடன் பணியாற்ற தயாராக இருப்பதாக கூறியிருந்தார்.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்