நல்ல நேரம்:
காலை- 9:30 மணி முதல் 10:30 மணி வரை
மாலை- 4:30 மணி முதல் 5:30 மணி வரை
கெளரி நல்லநேரம்:
இரவு - 6:30 மணி முதல் 7:30 மணி வரை
ராகுகாலம்:
பகல்- 12 மணி முதல் 1:30 மணி வரை
குளிகை:
பகல் 10:30 மணி முதல் 12மணி வரை
எம கண்டம்:
காலை 7:30 மணி முதல் 9 மணி வரை
சூலம், பரிகாரம்:
வடக்கு , பால்
சந்திராஷ்டமம்:
பூராடம்
இன்றைய ராசிபலன்கள்:
மேஷம்:
புதிய நட்புகள் கைகூடும். நீண்ட நாள் சந்திக்காத நண்பர்களை சந்தித்து பேசி மகிழும் வாய்ப்பு கிடைக்கலாம். சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். பெற்றோர் உடலில் அக்கறை செலுத்தவும். தொழில் சிரமம் இன்றி நகரும்.
ரிஷபம்:
உடல் நல்ல ஆரோக்கியம் பெறும். கடந்த சில நாட்களாக உடலில் இருந்த பிர்ச்சனைகள் தீரும். புதிய முயற்சிகளை முன்னெடுப்பீர்கள். அலுவலகத்தில் உங்கள் உழைப்பை உணர்ந்து தொடர்புகொள்வார்கள். எதிர்பார்த்த பண வரவு இருக்கும்.
மிதுனம்:
நன்மைகள் கை கூடி வரும். உடன்பிறந்தவர்கள், உறவினர்கள் வழி சொத்து கிடைக்கலாம். கார், நிலம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். பண வரவிற்கான கதவுகள் திறக்கும். புதிய முதலீடுகள் பயன்தரலாம். முடிந்த வரை சுயமாக சிந்தித்து செயல்படவும்.
கடகம்:
தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். சகபோட்டியாளர்கள், உடன் பணிபுரிவோர் உங்கள் உழைப்பை கண்டு வியப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். குழந்தைகள் நலனில் அக்கறையாக இருங்கள்.
சிம்மம்:
எதிர்பார்த்ததை விட செலவுகள் அதிகரிக்கும். திட்டமிட்ட கணக்குகள் எகிறும். முடிந்தவரை தொழிலில் கோபத்தை குறைக்கவும். எதிர்மறை எண்ணங்கள் பயன்தராது. உன் அன்பை குடும்பத்தார் சில நேரம் புரிந்து கொள்ளாமல் போகலாம்.
கன்னி:
தாய், தந்தையின் அன்பை பெறுவீர்கள். மனைவி, பிள்ளைகள் உங்களை கண்டு பெருமை கொள்வார்கள். வெளியூர், வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் வரும். வாகனத்தில் கவனமாக செல்லவும். சுபச் செலவுகளுக்கு வாய்ப்பு உண்டு.
துலாம்:
எடுத்த காரியத்தில் தடங்கள் ஏற்படாலம். புதிய முயற்சிகளை முடிந்தவரை ஒருநாள் ஒத்திவைக்கலாம். கணவன் , மனைவியிடம் மன கசப்பு ஏற்படலாம். செலவுகளை குறைக்கவும். உடல் நலனில் சிறிய குறைபாடு ஏற்படலாம். குழந்தைகள் மகிழ்ச்சி தருவர்.
விருச்சிகம்:
கடந்த சில நாட்களாக இருந்த ஒருவித மனப்பதட்டம் நீங்கி, மகிழ்ச்சியான சூழல் உருவாகும். தொழிலில் ஆர்வமுடன் செயல்படுவீர்கள். நண்பர்களிடமிருந்து நல்ல செய்திகள் வரலாம். வெளியூர் பயணங்களில் நாட்டம் வரும். அதற்கான முயற்சிகளை எடுப்பீர்கள்.
தனுசு:
தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட வாய்ப்பு. பண வரவு தாராளமாக இருக்கும். முடிந்தவரை வீண் செலவுகளை தவிர்க்கவும். வரும் பணத்தை சேமித்து வைப்பது எப்போதும் நல்லது.
மகரம்:
உங்கள் முயற்சிகள் தாமதம் ஆகலாம். எடுத்த எடுப்பில் எதுவும் நடக்காது. கடும் மனஉளைச்சலுக்கு வாய்ப்பு இருக்கலாம். பொறுமையாக இன்றைய நாளை அனுகவும். முடிந்தவரை இறைவழிபாடு பயன்தரும். வீண் கோபம், குழப்பங்களை தவிர்க்கவும்.
கும்பம்:
இல்லத்தில் இன்பம் பொங்கும். கடன் உள்ளிட்ட சுமைகள் தீரும். எதிர்பார்த்த பண வரவு இருக்கும். வெளியூர் தொலைபேசி வழி தகவல்கள் மகிழ்ச்சியை தரும். வீட்டில் விருந்து உண்டு மகிழ்வீர்கள். குடும்பத்தாரிடம் அன்பு மேலோங்கும்.
மீனம்:
பணவரவு கொட்டும். எதிர்பார்த்ததை விட நல்ல லாபம் இருக்கும். பாக்கிகள் வசூலாகும். முடிந்தவரை போக்குவரத்தில் பணம் கொண்டு செல்லும் போது கவனமாக இருக்கவும். குடும்பத்துடன் கோயில் , சுற்றலா செல்ல திட்டமிடுவீர்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்