சென்னை புரசைவாக்கம் வெள்ளாளர் தெருவைச் சேர்ந்தவர் வினோத்.  இவருக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு ஹேமலதா என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. வினோத்துக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆரம்பம் முதலே தம்பதிக்கு இடையே தொடர்ந்து வாக்குவாதமும் சண்டையும் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி தகராறு அதிகரிக்கவே வினோத்குமாரை விட்டு ஹேமலதா பிரிந்து தனியாகவே வாழ்ந்து வந்துள்ளார்.


சிவசங்கர் பாபாவின் ரகசிய அறை திறக்கப்பட்டது..! முக்கிய ஆவணங்கள் பறிமுதல்..


 பின்னர் இருவருக்கும் இடையே பேச்சுவாரத்தை நடத்திய உறவினர்கள் இருவரையும் சேர்த்து வைத்துள்ளனர்.  இந்நிலையில் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழத்தொடங்கிய ஹேமலதா வினோத்தின் செல்போனை எடுத்து பார்த்ததாக தெரிகிறது. அதில் பல பெண்களுடன் கணவன் இருக்கும் புகைப்படங்கள் இருந்துள்ளது. மேலும் சிலருடன் அரை நிர்வாண கோலத்தில் வீடியோவில் பேசிய காட்சிகளும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஹேமலதா வினோத்திடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தகராறு அதிகமாகவே ஆத்திரம் அடைந்த வினோத், மனைவியின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். 




சாக்லேட்டை காட்டி நடந்த கொடூரம்.. 12 வயது சிறுவனால் 4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. வெளிவந்த அதிர்ச்சி குற்றம்..


பின்னர் எதுவுமே தெரியாதது போல ஹேமலதாவின் குடும்பத்தினருக்கு போன் செய்த வினோத், ஹேமா கீழே விழுந்ததாகவும், வாயில் நுரை வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே ஹேமலதாவை மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். வினோத்குமார் மீது கடுமையான சந்தேகப்பட்ட ஹேமலதாவின் குடும்பத்தினர் கீழ்ப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். போலீசாரின் விசாரணையில் மனைவியை கொலை செய்ததை வினோத் ஒப்புக் கொண்டுள்ளார். இதனை அடுத்து கொலை வழக்கில் வினோத் கைது செய்யப்பட்டுள்ளார். இருவருக்கும் திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆவதால் ஆர்டிஓ விசாரணையும் நடைபெற்று வருகிறது. விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மனைவியை கணவனே கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு விபத்து போல நாடகமாடிய சம்பவம் புரசைவாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூட்யூபில் வீடியோக்களை காண